1. Home
  2. Throwback stories

Vijayakanth: கதை கேட்க மறுத்த விஜயகாந்த்... கண்ணீர் விட்ட அருண்பாண்டியன்

vijayakanth

கதை கேட்க மறுத்த விஜயகாந்த்... கண்ணீர் விட்ட அருண்பாண்டியன்



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். திரைத்துறையில் டாப்பில் இருந்த காலத்திலேயே பலருக்கும் பல உதவிகள் செய்துள்ளார். தி நகரில் இருந்த அவரது அலுவலகத்தில் எப்போது சென்றாலும் சாப்பாடு உண்டு என்ற காலமும் இருந்தது.

திரைத்துறையை பொருத்தவரை பல சிறிய தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்துள்ளார். பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

விஜயகாந்திற்கு திரைத்துறையில் பல நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் நடிகர் அருண்பாண்டியன். அவரது திரைபயணத்திற்கு உதவியது மட்டுமின்றி அரசியலிலும் அவருக்கு ஆசானாக இருந்தார். தனது கட்சி சார்பில் அவரை எம்.எல்.ஏ. வாக ஆக்கியவ்ர் விஜயகாந்த். ஆனாலும் ஒரு கட்டத்தில் விஜயகாந்திடமிருந்து அவர் விலகியது தனிக்கதை.

devan movie

இந்த நிலையில் அருண்பாண்டியன் பிரபல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, நான் எனது 100வது படத்தை இயக்கி நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது  விஜயகாந்தை சந்தித்தேன். எனது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினேன்.உடனடியாக் நிச்சயம் நடிக்கிறேன் என்றார். அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் மிக பிஸியாக இருந்தார். ஆனாலும் நான் கேட்டதும் உடனடியாக ஒத்த்க் கொண்டார்.

பின்னர் ஒருநாள் விஜயாகாந்திடம் படத்தின் கதையை கூற சென்றேன். ஆனால் அவர் கதையை கேட்க மறுத்தார். ஒன்றும் சொல்ல வேண்டாம், போ நான் நடிக்கிறேன் என்றார். இதனை கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு நல்ல மனிதன் அவர் என்று அருண்பாண்டியன் கூறினார்.
 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.