விஜய் சேதுபதியால மனநிலை பாதிக்கப்பட்டேன்!.. சேரன் சொன்ன பிளாஷ்பேக்!...
பாரதி கண்ணம்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் சேரன். சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்ட, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் திரைப்படங்களை இவர் இயக்கினார். பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி பொக்கிஷம், திருமணம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இதில் இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்ததோடு தமிழ் சினிமாவின் சிறந்த படங்களாக இந்த படங்கள் இப்போதும் இருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே சேரன் சினிமாவில் நடிகராக மாறிவிட்டார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவரின் ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போதும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இடையில் விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, விஷால் போன்ற பல நடிகர்களிடம் கதை சொல்லி படம் இயக்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய சேரன் ‘விஜய் சேதுபதிக்காக நான் ஒரு கதையை எழுதினேன். மிகவும் நல்ல கதை. மிகவும் முக்கியமான படம். அது இல்லங்குறப்ப எனக்கு ஒரு பிரச்சனை இல்ல.
ஆனா எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம்.. மனநிலை பாதிக்கப்பட்ட இடத்துக்கு போயிட்டேன். அதுல இருந்து மீண்டு வரவே ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு கதையை யோசித்து எழுதி அதை டெவலப் பண்ணி வச்சா, அந்த கஷ்டத்தை உணராமல் அந்த நடிகர் வேணாம்னு சொல்லிட்டு போறது கஷ்டமா இருக்கு. சினிமாவுல கதையை நேசித்து வறவங்க ரொம்ப கம்மி ஆயிட்டாங்க’ என புலம்பி இருக்கிறார் சேரன்.
