1. Home
  2. Throwback stories

நான் உயிரோட இருக்கறது உனக்குப் புடிக்கலையா..? வாண்டடா வந்த கார்த்திக்கை கலாய்த்த இயக்குனர்..!

குழந்தை மனசுக்காரர்... நல்ல உள்ளம் படைத்தவர்... பழக்கவழக்கங்கள் தான் அவரை மாத்திடுச்சு..!

தமிழ்சினிமா உலகில் நவரச நாயகன். எவ்வளவு லேட்டா சூட்டிங் வந்தாலும் கற்பூரம் மாதிரி பத்திக்கிட்டு செமயா நடிச்சிக் கொடுப்பாரு. அந்தளவுக்கு சூப்பரான நடிகர் தான் கார்த்திக். நல்ல உள்ளம் கொண்டவர். அவரோட சில பழக்க வழக்கங்களால் தான் அவரோட கேரியரேப் போனதாம். அந்த வகையில் பிரபல இயக்குனர் எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு கார்த்திக்கைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வருஷம் 16 ஓடும்போது சட்டத்தின் திறப்பு விழா கால்ஷீட் கொடுத்தார். கிழக்கு வாசல் ஓடும்போது சக்கரவர்த்திக்குக் கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அப்போ கால்ஷீட் கொடுத்தாரு. ஆனா சரியா வரலை. செட் போட்டும் வர மாட்டாரு. அதனால அப்பவே 70 லட்சம் எங்களுக்கு நஷ்டம். அந்த நஷ்டத்தை விஜய் நடித்த விஷ்ணு படத்தை எடுத்து ஈடுகட்டினோம்.


அவர் குழந்தை மனசு உள்ளவர். அப்பாவை எங்க பார்த்தாலும் கட்டிப் புடிச்சிக்கிட்டு அப்பா அப்பான்னு சொல்வார். அதனால அப்பாவுக்கு அவரு மேல எந்தக் கோபமும் கிடையாது. ஏன்னா அவரோட கேரக்டர் அப்படி. அந்த டைம்ல அப்படி இருந்தாரு.

கார்த்திக்குக்கு உள்ளத்தை அள்ளித்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்லா ஓடியது. அது ஒரு கம்பேக்கா இருந்தது. அதனால கார்த்திக் பழைய நஷ்டத்தை மனசில வச்சிக்கிட்டு அப்பாக்கிட்ட வந்தார். 'என்னப்பா என்ன திட்டத்தோட வந்துருக்கே'ன்னு கேட்டாரு.

'இல்லப்பா இப்ப வந்து உங்களுக்குக் கால்ஷீட் தாரேன். அந்த நஷ்டத்தை ஈடுகட்டிடலாம்'னு சொன்னாரு. அப்போ அப்பா காமெடியாகத் தான் சொன்னாரு. 'அப்பா நான் உயிரோடு இருக்கேன். இது உனக்குப் புடிக்கலையான்னு கேட்டாரு. இல்லப்பா வேணாம்பா. ரொம்ப தேங்க்ஸ்பா. உன்னோட நல்ல மனசு புரியுது. எதுக்கு திரும்ப திரும்ப செட்டாகல'ன்னு மறுத்துட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1993ல் சக்கரவர்த்தி படத்தைத் தயாரித்து எழுதி இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படத்தில் கார்த்திக், பானுப்பிரியா உள்பட பலர் நடித்தனர். தேவா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.