throwback stories
சிவாஜி படத்தில் நடந்த மாதிரி எம்ஜிஆர் படத்தில் நடக்கவே நடக்காது.. என்ன மேட்டர் தெரியுமா?
என்னது டைட்டில் கார்டில் சிவாஜி பேர் இல்லையா? அடக் கொடுமையே.. என்ன படம் தெரியுமா?
என்னது டைட்டில் கார்டில் சிவாஜி பேர் இல்லையா? அடக் கொடுமையே.. என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகர்களாக திகழ்ந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. சிவாஜியின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி அவருக்கு ஏகப்பட்ட விருதுகளும் பதக்கங்களும் கிடைத்தன. எம்ஜிஆரின் படங்களை பொருத்தவரைக்கும் அவருடைய படங்களுக்கு முழுவதுமாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகள் தான் கிடைத்தன.
அந்த அளவுக்கு மாறி மாறி இருவரும் தொழில் முனையில் ஒரு பெரும் போட்டியாளர்களாக இருந்து வந்தார்கள். அது மட்டுமல்ல சிவாஜி எம்ஜிஆர் இவர்களுக்கு என தனியாக கலைஞர்கள் பணியாற்றி வந்தனர். சிவாஜியின் படங்களில் பெரும்பாலும் மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, முத்துராமன் போன்றவர்கள் தான் முதன்மை நடிகர்களாக பணியாற்றினர் .
எம்ஜிஆரின் படங்களில் அசோகன், மனோகர் இவர்கள்தான் முதன்மை நடிகர்களாக பணியாற்றினர். அதுபோல கதாநாயகிகளில் ஜெயலலிதா சரோஜாதேவி ஆகிய இருவரும் எம் ஜி ஆர் படங்கள் மற்றும் சௌகார் ஜானகி சாவித்திரி பத்மினி சிவாஜி படங்களிலும் நடித்து வந்தனர்.
இப்படி இருவருக்குமே தனித்தனி நடிகர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் சிவாஜி நடித்த ஒரு படத்தில் அவரின் பெயரை கதாநாயகிகளின் பெயர்களுக்கு பிறகு டைட்டில் கார்டில் போடப்பட்டிருந்த தகவல்தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. இரும்புத்திரை என்ற படத்தில் முதலில் வைஜெயந்திமாலா மற்றும் சரோஜாதேவி இவர்களின் பெயர்களை டைட்டில் கார்டில் போட்ட பிறகுதான் சிவாஜியின் பெயரை போட்டு இருப்பார்கள்.
அதற்கு காரணம் அந்த படம் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமாம். அதனால் அவர்களின் பெயரை முதலில் போட்டிருப்பார்கள் என சித்ரா லட்சுமணன் கூறினார். ஆனால் இதுபோல ஒரு காரியம் எம்ஜிஆர் படங்களில் நடக்கவே நடக்காது என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
நகைச்சுவை புலி சிங்கமுத்து : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி சேட்டைகள்...
கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்: Vijay: கோலிவுட்டை பொறுத்தவரை பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. அதேநேரம் ‘சூப்பர் ஸ்டார் பட்டம்...
திரைத்துறையில் ஒரு நடிகர் பிரபலமாக வேண்டுமெனில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும். திறமை இருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்...
Ilayaraja:சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் அந்த இடத்தை பிடிக்க அவர்கள் கடந்து வந்த பாதை,...