இந்த கதையில நீங்களே நடிங்க!.. மிஷ்கினிடமிருந்து எஸ்கேப் ஆன தனுஷ்!.. அட அந்த படமா?..
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இந்த படம் ஹிட் அடிக்க முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்கிற பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது.
அதன்பின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கினார். மிஸ்கின் ஒரு தனி பாணியில் கதை சொல்வார். அதிக வசனங்கள் இல்லாமல் கேமரா கோணத்தில் ஒரு காட்சியை உணர்த்திவிடுவார். எனவே, அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
சைக்கோ படத்திற்கு பின் பிசாசு 2, டிரெய்ன் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை. கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் மிஷ்கின் நடிகர் மிஷ்கினாக மாறிவிட்டார். மாவீரன், லியோ, டிராகன் உள்ளிட்ட பல டங்களிலும் நடித்திருக்கிறார். தற்போதும் தொடர்ந்து நடத்து வருகிறார். ஒருபக்கம், ஓப்பனாக பேசுகிறேன் என பேட்டிகளிலும், சினிமா மேடைகளிலும் அந்தரங்க விஷயங்களை பற்றி கூட பேசி சர்ச்சையில் சிக்கிவிடுவார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மிஷ்கின் ‘நந்தலாலா படத்தின் கதையை நான் தனுஷிடம்தான் முதலில் சொன்னேன். நான் கதை சொல்லும் விதத்தை பார்த்து விட்டு அந்த கதை அவருக்கு பிடித்திருந்தும் ‘நீங்களே இந்த கதையில் நடியுங்கள்’ என சொல்லிவிட்டார். அவர் சொன்னது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
ஏனெனில் அப்போது நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. எனக்குள் ஒரு நடிகனை முதலில் பார்த்தது தனுஷ்தான். அதன்பின் நானே நடிக்க முடிவெடுத்து உடல் எடை குறைத்து அந்த படத்தில் நடித்தேன். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் அந்த படம் பேசப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றது’ என சொல்லி இருக்கிறார்.
மிஷ்கின் இயக்கி நடித்து 2010ம் வருடம் வெளிவந்த நந்தலாலா திரைப்படம் 1999ம் வருடம் வெளிவந்த Kikujiro என்கிற ஜப்பான் படத்தின் காப்பி ஆகும். ஆனால், மிஷ்கின் இதை எங்கும் சொல்லவில்லை. படத்தின் டைட்டிலிலும் கூட இதை அவர் குறிப்பிடவில்லை. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
