அரும்பு மீசை, குறும்பு பார்வை பார்த்த 80ஸ் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சுரேஷ். இவர் நடித்த பன்னீர் புஷ்பங்கள் பட்டி தொட்டி எங்கும் அப்போது பட்டையைக் கிளப்பியது. ஏராளமான இளம் ரசிகைகள் இவருக்கு உண்டு. ஆனால் இவருக்கோ அந்தக் காலத்தில் அவ்வளவு நெருக்கடி. சுதந்திரமாக ஒரு படத்தைக்கூட தேர்வு செய்து நடிக்க முடியாத நிலை. எல்லாவற்றுக்கும் என்ன காரணம்? மனம் திறக்கிறார் சுரேஷ். வாங்க பார்க்கலாம்.
அப்பா எடுத்த படத்துல நிறைய கடன். நான் சினிமா ஆர்டிஸ்டா ஆனதும் 6 வருஷம் அந்தக் கடனை எல்லாம் அடைச்சேன்.
34 லட்சம் கடன் 6 வருஷம்: அப்பவே 80களில் 34 லட்சம் கடன் இருந்தது. தயாரிப்பாளர்கிட்ட இருந்து பணத்தை வாங்கியதும் இந்த மாசத் தேவைக்கும், அடுத்த மாச சேப்டிக்கும் மட்டும் பணத்தை வச்சிக்கிட்டு மீதியை கடனை அடைக்கக் கொடுத்துடுவேன். இப்படி 6 வருஷமா வாழ்க்கை நடத்தினேன்.
எங்கேயுமே நான் ஹீரோவாயிட்டேன்கற ஃபீலிங் வரவிடல கடவுள். இன்னும் எவ்வளவு கடன் இருக்கு? அதை அடைக்கணுமேன்னு தான் மைன்ட் ஓடிக்கிட்டு இருந்தது. முதல்ல என்ன கடவுள் ஒரு பேலன்ஸ்லயே வச்சிக் கொண்டு வந்துட்டாரு.
பன்னீர் புஷ்பங்கள்: கடனை அடைக்கறதுக்கு நிறைய பிரஷர் இருந்துருக்கும். கடன்காரங்க எங்க வீட்டுக்கு வருவாங்க. நான் அவங்க வீட்டுக்கு எல்லாம் போய் பேசினதுக்கு அப்புறம் அவங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அப்ப தான் பன்னீர் புஷ்பங்கள் நல்லா ஓடிக்கிட்டு இருந்த நேரம். நான் கேரன்டி எடுத்துக்கறேன்.
எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. தயவுசெய்து வீட்டுக்கு வராதீங்கன்னு நான் சொன்னேன். பணம் கட்ட வேண்டிய தேதி வந்துடுச்சுன்னா சூட்டிங்ஸ்பாட்டுக்கு சேட்டோட ஆளு வந்துருவாங்க. 5 நாள் டைம் கேட்டேன்னு சொல்லுங்கன்னு சொல்லி அனுப்புவேன். எப்படியோ கடவுள் புண்ணியத்துல நான் கொடுத்துட்டேன்.
18 படங்கள்: அதனாலதான் யாருக்கும் தெரியாத விஷயம். அவன் அவ்வளவு பாப்புலரா ஆகிட்டான். அதனாலதான் அத்தனை படம் பண்றான்னு சொல்லுவாங்க. ஒரு வருஷத்துல 18 படம் பண்ணினேன். வேற யாரும் பண்ணினாங்களான்னு தெரியாது. ஆனா என்னோட ரெக்கார்டு அதுதான்.
தப்பான படங்கள்: அதுக்குக் காரணம் கடனை அடைக்கத்தான். அந்த 18ல 12 படங்கள் ஓடலை. அது பெரிய தப்பு. பெரிய மைனஸ். ஆனா என்னோட பிரச்சனை. எனக்கு நிதி வரும் சூழல் இருந்ததுன்னா அந்த தப்பான படங்கள் எல்லாம் பண்ணிருக்க மாட்டேன். எனக்கு என்ன திறமை. அதுக்கு ஏற்ற படமா இருக்கான்னு எனக்கு தேர்வு செய்ற சுதந்திரம் இல்ல. நெருக்கடியிலேயே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்தது.
பணம் விட்டா வேற எதுவும் இல்லையா? பணத்துக்காக இவ்வளவு வெறியா இருக்காங்களேன்னு யோசனை வரும். பணம் நம்மை அந்தளவு தாக்காம பார்த்துக்கணும் அப்படிங்கற மாதிரி எண்ணங்கள் எல்லாம் வரும். இன்னைக்கும் ஒரு சட்டை 800 ருபாவான்னு பார்ப்பேன்.
முதல் ஸ்போர்ட்ஸ் கார்: 300ரூபான்னா எடுக்கலாமேன்னு பார்ப்பேன். உன் உடம்பு நல்லாருந்தா சட்டையும் நல்லாருக்கும். தென்னிந்தியாவில் முதல் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கினதே நான்தான். 8.50லட்சம். பெரிய விஷயம். மாசத்துக்கே 30 ஆயிரம் கடன் அடைக்க வேண்டி இருக்கும்.
அப்ப தான் அப்பாவுக்கும், எனக்கும் பிரச்சனை ஆகி நான் வெளியே போய் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டேன். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற விஷயத்தை நான் நம்புறேன். கீழே விழறது தப்பு இல்ல. எழுந்திருக்காம இருக்கறதுதான் தப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…