throwback stories
கவுண்டமணி விஜயகாந்த் கிட்ட பேசாம பாத்துக்கோங்க.. இப்ப தெரியுதா ஏன் அந்தப் படம் ஹிட்டுனு?
Published on
நட்பிற்கு அடையாளம்:
நட்பிற்கு அடையாளமாக இருந்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர். இவர்கள் நட்பின் ஆழத்தை அடிப்படையாக வைத்து ஒரு படமே எடுத்து விடலாம் என்ற அளவுக்கு இருவரின் நட்பும் தமிழ் சினிமாவில் மிகவும் ஆச்சரியத்தை தந்தது. ஒரு காவிய நட்பு என்றே சொல்லலாம். விஜயகாந்த் இந்த அளவு சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக மாற்றியதற்கு ராவுத்தர் மிக மிக முக்கிய பங்கு வகித்தவர். இருவரும் சேர்ந்து ஒரு தனி சகாப்தமே நடத்தினார்கள் என்று கூட சொல்லலாம். விஜயகாந்த் பொதுவாகவே சாதி மதம் கடந்து அனைவரையும் சமம் என மதிப்பவர்.
அப்படிப்பட்ட ஒரு மதங்களைக் கடந்த மனிதநேயம் மிக்க ஒரு நட்பாக தான் இவர்கள் இருவரும் பழகி வந்தார்கள். இப்படி இருந்தவர்களின் நட்பில் திடீரென ஒரு விரிசல் ஏற்பட்டு அது ராவுத்தர் மறைவில்தான் மீண்டும் இணைந்தார்கள். ஆம் பல ஆண்டுகளாக இருவரும் பேசாமல் இருந்து கடைசி ராவுத்தர் மறைவிற்கு தான் விஜயகாந்த் கனத்த இதயத்துடன் அழுத முகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
ராவுத்தர் மறைவு:
அந்த காட்சியை பார்க்கும் பொழுது கருணை இல்லாதவர்களின் மனம் கூட இறங்கி விடும். அந்த அளவுக்கு கதறி அழுதார் விஜயகாந்த். அப்படி அவர்களுக்குள் என்னதான் நடந்தது என இதுவரை யாருக்குமே தெரியாது. ராவுத்தரை பொறுத்த வரைக்கும் விஜயகாந்த் படத்தில் நல்ல முறையில் காட்ட வேண்டும் என்று எப்பொழுதுமே நினைக்கக் கூடியவராம். இதைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் டி சிவா கூறும் போது விஜயகாந்த் கெரியரில் மிக மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது சின்ன கவுண்டர்.
விஜயகாந்த் நடிக்கும் எந்த படங்களின் கதைகளிலும் ராவுத்தர் தலையிட மாட்டாராம். ஆனால் ஒரு சில காட்சிகளில் மட்டும் முரண்பாடு இருந்தது என்றால் அதை கூறி மாற்றிவிடுவாராம். அப்படித்தான் ‘சின்ன கவுண்டர் படத்தில் எப்படியாவது படம் முடியும் வரை விஜயகாந்துடன் கவுண்டமணியை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என ஆர் வி உதயகுமாரிடம் ராவுத்தர் கூறினாராம். அதற்கு என்ன காரணம் என்றால் சின்ன கவுண்டர் படத்தை பொருத்தவரைக்கும் விஜயகாந்தின் கேரக்டர் எப்படிப்பட்ட ஒரு முக்கியமான கேரக்டர் என அனைவருக்கும் தெரியும்.
சின்னக்கவுண்டர் மேஜிக்:
chinnagounder
ஊரே மதிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்துடன் படமுழுக்க கவுண்டமணி இணைந்து டிராவல் செய்யும்போது அது வேறு மாதிரியாக பிரதிபலிக்கும் .கவுண்டமணி நடித்த பெரும்பாலான படங்களில் அவர் பெரும்பாலும் ஹீரோக்களுடனே கிண்டல் அடிக்கும் விதமாகவும் நக்கல் செய்யும் விதமாகவும்தான் நடித்திருப்பார். அதைப்போல சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துடன் ட்ராவல் செய்யும் மாதிரி காட்சிகள் அமைந்திருந்தால் சின்ன கவுண்டர் என்ற கதாபாத்திரத்தின் தன்மையே மாறிவிடும் என்பதற்காக அந்த படத்தில் விஜயகாந்துடனான கவுண்டமணி காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்த ஒரு காரணத்தினால் தான் ராவுத்தர் உதயகுமாரிடம் இந்த ஒரு ஐடியாவை சொல்லி இருக்கிறார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
நகைச்சுவை புலி சிங்கமுத்து : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி சேட்டைகள்...
கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்: Vijay: கோலிவுட்டை பொறுத்தவரை பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. அதேநேரம் ‘சூப்பர் ஸ்டார் பட்டம்...
திரைத்துறையில் ஒரு நடிகர் பிரபலமாக வேண்டுமெனில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும். திறமை இருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்...
Ilayaraja:சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் அந்த இடத்தை பிடிக்க அவர்கள் கடந்து வந்த பாதை,...