Connect with us

throwback stories

சிவாஜிக்கு மகளா, சகோதரியா, காதலியா, மனைவியா நடித்த ஒரே நடிகை.. அட இவங்களா?

விஜய்சேதுபதி கொள்கை:

தனக்கு மகளாக நடித்த ஒரு நடிகைக்கு நான் ஹீரோவாக நடிப்பதா என விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி செட்டியை குறிப்பிட்டு ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது கூட அனைவருமே ரஜினியை கேலி செய்தனர். இப்படி சொல்லும் விஜய் சேதுபதி எங்கே? ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவை தனக்கு ஜோடியாக ஆக்கிய ரஜினி எங்கே என ரஜினியையும் விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ரஜினியை வறுத்தெடுத்தனர்.

ஆனால் அந்த காலத்தில் சிவாஜியுடன் மகளாக சகோதரியாக காதலியாக மனைவியாக நடித்த ஒரே நடிகை பற்றிய தகவலைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். 60களில் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைக்கழகமாக அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தவர். நடிப்பு மட்டுமே தன்னுடைய மூச்சு என இருந்தவர்.

நடிப்புதான் மூச்சு:

அவருடைய ஒவ்வொரு நரம்புகளுமே நடிக்கும். ஒவ்வொரு அசைவுகளிலும் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும் .அவருடைய கண்கள் நடிக்கும். முகம் நடிக்கும். வாய் நடிக்கும். அப்படி சினிமா மீதும் நடிப்பின் மீதும் பெரும் பற்று உடையவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் மகளாகவும் நடித்து சகோதரியாகவும் நடித்து காதலியாகவும் நடித்து கடைசியில் மனைவியாகவும் நடித்த ஒரு நடிகை .அவர் யார் என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை லட்சுமி. தன்னுடைய 16 வது வயதில் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி. இவர் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. கங்கா என்ற ஒரு வித்தியாசமான கேரக்டரில் அந்த படத்தில் நடித்து மிகப்பெரிய தாக்கத்தை அந்த காலத்தில் ஏற்படுத்தினார் லட்சுமி.

lakshmi

lakshmi

பெரும்பாக்கியம்:

நடிகையர் திலகம் என்றும் இவரை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு நடிப்பில் லட்சுமி கைதேர்ந்தவர். கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்து இன்று தெலுங்கில் மிகப் பாப்புலரான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் லட்சுமி.சமீபத்திய ஒரு விழா மேடையில் சிவாஜியை பற்றி கூறும் பொழுது சிவாஜிக்கு மகளாக சகோதரியாக காதலியாக மனைவியாக நடித்த ஒரே நடிகை நான் தான் என குறிப்பிட்டு இருக்கிறார் லட்சுமி. அதிலும் சிவாஜி கடைசியாக நடித்த படையப்பா படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தது என்னுடைய பெரும் பாக்கியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in throwback stories

To Top