throwback stories
லைட்ட தூக்கி அடிக்க வந்த விஜயகாந்த்.. பஞ்சாயத்துக்கு வந்த ராதாரவி! இப்படியெல்லாம் நடந்தது?
Published on
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவஞ்சலி:
நாளை விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி. தேமுதிக கட்சி சார்பாக அவருடைய முதலாமாண்டு நினைவு நாளை வெகு விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். அதனால் பகைமையை மறந்து எந்தவித வெறுப்பும் இல்லாமல் இந்த நினைவு நாளுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி பல செய்திகள் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது. சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். சிறந்த தலைமைப் பொறுப்பாளருக்கு உகந்த மனிதராகவும் இருந்திருக்கிறார். எங்கும் தவறு நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். அப்படியே நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் முதல் ஆளாக இருந்திருக்கிறார் விஜயகாந்த்.
ராம்கிக்கும் கேப்டனுக்கும் உள்ள நட்பு:
இந்த நிலையில் நடிகர் ராம்கி விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். ஊமை விழிகள் படத்தில் விஜயகாந்த் தீனதயாளன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ராம்கி உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம். அப்படி இருவருக்கும் ஆரம்பகாலம் முதலே நல்ல நட்பு இருந்து வந்ததாக கூறினார் ராம்கி. அந்தப் படத்திற்கு பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கி ஹீரோவாகவும் விஜயகாந்த் கேப்டனாகவும் நடித்திருந்தார்.
செந்தூரப்பூவே படத்திலிருந்துதான் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் வந்ததாக ராம்கி கூறினார். அந்தப் படத்தின் போது இரண்டு காமெடி ஆர்ட்டிஸ்டுகள் ஷாட் இல்லாத சமயம் கடற்கரை ஓர மணலில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தார்களாம். அருகே செந்தூரப்பூவே படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்ததாம். ராம்கி , விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம்.
கலவரம் செய்த கும்பல்:
இந்த நகைச்சுவை நடிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நான்கு பேர் குடித்துவிட்டு கலாட்டா செய்திருக்கிறார்கள். அப்போது அந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இவர்களை தட்டிக் கேட்டு அடித்து துரத்திவிட்டாராம். சிறிது நேரத்திலேயே ஒரு பெருங்கூட்டத்தை அந்த கும்பல் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்து கலவரம் செய்திருக்கிறார்கள்.
அங்கு இருந்த லைட் ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். உடனே விஜயகாந்த் அருகில் இருந்த ஒரு பெரிய லைட் கம்பியை எடுத்து சுத்து சுத்தி அந்த கும்பலுக்குள் புகுந்து அனைவரையும் துவம்சம் செய்தாராம். இது உண்மையிலேயே நடந்த சண்டை என ராம்கி கூறினார். இதை அறிந்ததும் ராதாரவி வர அவர் பஞ்சாயத்து செய்து கடைசியில் அந்த கும்பலையே இவர்கள் நடத்தும் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பாக இருக்க வைத்திருக்கிறார். இந்த சம்பவம் பெரிய அளவில் நடந்ததாக ராம்கி கூறினார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். இவர் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர். வெற்றிமாறனின் முதல்...
நகைச்சுவை புலி சிங்கமுத்து : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி சேட்டைகள்...
கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்: Vijay: கோலிவுட்டை பொறுத்தவரை பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. அதேநேரம் ‘சூப்பர் ஸ்டார் பட்டம்...
திரைத்துறையில் ஒரு நடிகர் பிரபலமாக வேண்டுமெனில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும். திறமை இருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்...
Ilayaraja:சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் அந்த இடத்தை பிடிக்க அவர்கள் கடந்து வந்த பாதை,...