Categories: throwback stories

Manjal veeran: மஞ்சள் வீரன்ல ஹீரோயினா? அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டாங்க… குமுறும் நடிகை

மஞ்சள் வீரன் படத்தை செல்லம் இயக்குகிறார். டிடிஎப்.வாசனுடன் பிரச்சனை ஆனதால் இப்போது கூல் சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக முதலில் பிரனவை சொன்னார்கள். ஆனால் நடந்ததே வேறு. என்னன்னு பாருங்க. மஞ்சள் வீரன் கதாநாயகின்னு சொல்லப்படுற பிரனவ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

Also read: Vijayakanth: கேப்டனை கொண்டாடுறதுக்கு இதுதான் காரணம்.. அவர் நடிச்ச இத்தனை படங்களில் மாறாத ஒன்னு

இப்போ மகேஷ்வரான்னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுல ஹரா படத்து இயக்குனர். தேசிங்குராஜா 2 முடிச்சிருக்கேன். மூன்றாம் மனிதன் படம் பண்ணினேன். ரிலீஸ் ஆகிடுச்சு. மஞ்சள் வீரன் டைரக்டர் செல்லம் நீங்க தான் ஹீரோன்னு அறிவிச்சிட்டாரு. கூல் சுரேஷ் எல்லாம் கலந்துக்கிட்டாரு. அதுபற்றி என்ன சொல்றீங்கன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு பிரனவ் சொன்ன பதில் இதுதான்.

director chellam

அது வேறொரு படம்…

மஞ்சள் வீரனுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அப்போ எடுத்த படம் அது. அந்த டைம் நான் வேறொரு சூட்டிங்ல இருக்கேன். கூல் சுரேஷ் கூட ஒரு படம் நடிச்சிக்கிட்டு இருந்தேன். அது மாதிரி மஞ்சள் வீரன் படத்துக்கு புரொமோஷனுக்காக கூல் சுரேஷ் வந்தாரு. நானும் கூட நின்னோம். ஆனா நான் நடிச்ச படம் மஞ்சள் வீரன் கிடையாது. அது வேறொரு படம். இப்போ பேர் சொல்ல முடியாது. டைரக்டர் பேரு உதயா.

காரணம் கூல் சுரேஷ் தான்…

செல்லம் அப்படின்னா யாருங்க? நீங்க ட்ரெண்ட் ஆக்கி விட்டவரு. அவரு மஞ்சள் வீரன் படத்தை டைரக்ட் பண்றாருன்னு தெரியும். டிடிஎப் வாசனுக்கும் அவருக்கும் ஏதோ பிரச்சனை. அதனால அவரை செல்லம்னு தெரியும். மற்றபடி எதுவும் தெரியாது. ஆனா அவரு தனியா வந்தாரு. ஆனா மொத்தமா போட்டோ போட்டு புரொமோட் பண்ணினாங்க.

இதுக்கு எல்லாம் காரணம் கூல் சுரேஷ் தான். அதுல நான் இருந்ததைப் பார்த்ததும் எல்லாரும் அதுல தான் ஹீரோயின்னு நினைச்சிருக்காங்க. ஆனா அதுல நான் கிடையாது. கூட்டத்துல வேடிக்கைப் பார்த்த ஆளு தான் நான்.

செய்யாத தப்புக்குத் தண்டனை

கூல் சுரேஷ் தான் அந்தப் படத்துக்கு என்னை ஹீரோயினா நடிக்க வைக்கலாம்னு சொல்லிருக்காரு. ஆனா இப்போ அந்தப் படத்துல கூப்பிட்டாலும் நான் நடிக்க மாட்டேன். அது சர்ச்சையாய் இருக்கு. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டதுக்கு இந்த ஒரு போட்டோல ஸ்பாயில் ஆன மாதிரி இருக்கு. செய்யாத தப்புக்குத் தண்டனையை அனுபவிக்கிற மாதிரி இருக்கு.

Also read: Shrutihaasan: 3 படத்துக்கு அப்புறம் எந்த பட வாய்ப்புமே வரல?!… யாருமே கூப்பிடல!… பீல் பண்ண ஸ்ருதிஹாசன்!…

அப்புறம் என் ப்ரண்ட்ஸ் எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. பிரனவ் நல்லா தானே போய்க்கிட்டு இருக்கு. ஒரு படத்துல நடிக்கப் போறேன்னு தானே சொன்ன… ஏன் மஞ்சள்வீரன்னு சொல்லலைன்னு அசிங்கம் அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு யாருக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணவே முடியலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v