Ajith: அஜித்தோட அந்த படம்!.. எனக்கு தொழிலே போச்சி!.. புலம்பும் தயாரிப்பாளர்!...
திரையுலகில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுப்பது யாருக்குமே சாத்தியமில்லை. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களே சில தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்கள். இது
ரஜினி கமலுக்கும் பொருந்தும். சினிமாவில் இது நடக்கும்.. தவிர்க்கவே முடியாது.
அதேபோல் எல்லா இயக்குனர்களாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்க முடியாது. இது தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். ஒரு படம் லாபம் கொடுக்கும். ஒரு படம் நஷ்டம் கொடுக்கும். அதையெல்லாம் தாங்கி நின்றால்தான் சினிமாவில் தொடர்ந்து தொழில் செய்ய முடியும். 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன். ஆனால் ஒரு கட்டத்தில் இவர் படம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த காஜா மொய்தின் ‘நான் அஜித்தை வைத்து நிறைய படங்களை தயாரித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சம்பளத்தை ஏத்திவிட்டார். எனவே அவரை வைத்து படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்படித்தான் ஜனா என்கிற படத்தை தயாரித்தேன்.
அந்த படத்தை மூன்று வருஷம் எடுத்தார்கள். ஆனால் படம் படுதோல்வி. எனக்கு சினிமாவுல விழுந்த முதல் அடி அந்த படம்தான். நான் சினிமாவில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமும் இந்த படம்தான். அந்த படத்தை மட்டும் நான் தயாரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய படங்களை தயாரித்திருப்பேன் என ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் மற்றும் நடிகர் பாரதி கண்ணன் பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக்கை பற்றி பேசிய வீடியோ வைரலானது. அதில் கார்த்திக்கிடம் அட்வான்ஸ் கொடுத்து ஏமாந்து போன தயாரிப்பாளர் என அவர் சொல்லியதில் இந்த காஜா மொய்தீனும் இருந்தார். விஜயகாந்த் முன்னிலையில் கார்த்திக் பேச வந்த போது அவரை சேரை தூக்கி அடிக்கப் போனவரும் இதே காஜா மொய்தீன்தான். அதன்பின் காஜா மொய்தீனுக்கு மட்டும் கார்த்திக் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் என பாரதி கண்ணன் சொல்லியிருந்தார். அஜித் நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார்.
