எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த கமல்ஹாசன்
தமிழ் திரையுலகில் வசூல் சக்ரவார்த்தியாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.இவரது தோல்வி படங்கள் கூட நல்ல வசூலை கொடுத்துள்ளன. திரையுல்கம் மட்டுமின்றி அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர் அவர். எம்ஜிஆர் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த போது கமல்ஹாசன் வாலிப வயதில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
எம்ஜிஆர் நடிப்பில் 1975 இல் வெளிவந்த படம் நாளை நமதே. கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர். 1973ம் ஆண்டு வெளியான யாதோன் கி பாரத்தின் என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும் இந்த படம். இது பிரிந்து போனஅண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து வில்லன்களை பழி வாங்குவதுதான் மையக்கரு.

இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிக்க முதலில் கமல்ஹாசனிடம் பேசியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் கமல் மலையாள படம் ஒன்றி நடித்துக் கொண்டிருந்ததால் எம்ஜிஆர் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாம். இதனை கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
