Kamal: கமலுக்கு ஒன்னும் தெரியாது.. பயந்த சுபாவம்!.. கலாய்க்கும் புஜ்ஜி பாபு...
நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர், இயக்குனர், கதாசிரியர், நிறைய புத்தகங்களை படித்தவர், உலக அறிவு பெற்றவர், அறிவாளி, உலக அரசியல் தெரிந்தவர், பன்முக திறமை கொண்டவர், உலக நாயகன் என்றெல்லாம் பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். ஆனால் முதன்முறையாக கமல்ஹாசனுக்கு ஒன்னும் தெரியாது.. கமல் பயந்த சுபாவம் கொண்டவர் என ஒருவர் பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுடில் 40 வருடங்களுக்கு மேல் மேக்கப் மேனாக பணி புரிந்தவர் புஜ்ஜி பாபு. எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், பிரசாந்த் போன்ற பல நடிகர்களுக்கும் இவர் மேக்கப்மேனாக இருந்திருக்கிறார். நடிகர் சந்தானம் இவரை தலைவா, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் நடிக்க வைத்தார். அந்த படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் புஜ்ஜி பாபு.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘கமல் சாருக்கு எல்லாம் தெரியும்.. ஆனா எதுவும் தெரியாது.. பயங்கரமாக கோவப்பட்டு கத்துவார்.. ஆனால் திருப்பி நாம் கத்தினால் அமைதியாகி விடுவார்.. அவர் பயந்த சுபாவம் கொண்டவர்.. நடிப்பில் உலக நாயகன் என பெயர் வாங்கினார்.. ஆனால் லோக்கலில் அவர் அப்படி இல்லை.

ஒரு விஷயத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சாலே நிறைய தெரிஞ்ச மாதிரி பேசுவார்.. எப்ப என்ன பேசுவார் என அவருக்கே தெரியாது. அவர் ஒரு டைப்.. அவர நல்லவர்னு சொல்லலாம்.. கெட்டவர்னும் சொல்லலாம்... என்னை மிஞ்சி யாரும் கிடையாது அப்படிங்கற மாதிரியே பேசுவார்’ என சொல்லியிருக்கிறார் புஜ்ஜி பாபு.
6 மாதங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஒருமுறை என் மகளின் படிப்பு செலவுக்கு நான் கமல் சாரிடம் சென்று பணம் கேட்டேன். ஆனால் கோபமாக கத்திவிட்டார். அது எனக்கு சங்கடமாகிவிட்டது. அதன்பின் நான் அவருக்கு மேக்கப் போட செல்லவில்லை. கம்பெனியில் இருந்து அவருக்கு மேக்கப் போட கூப்பிட்டார்கள். நான் போகவில்லை. சந்தானம் என்னை நடிகராக மாற்றிவிட்டார்’ என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
