Connect with us
Rajni vasu

throwback stories

அந்தப் படத்தை என்னைப் பண்ணச் சொல்லி கெஞ்சி கேட்ட ரஜினி… முடிச்சை அவிழ்த்த வாசு

இயக்குனர் பி.வாசு ரஜினியை வைத்து மன்னன், சந்திரமுகி ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ரஜினியைப் பற்றி ஒரு தகவலை சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்னன்னு பார்க்கலாமா…

எமோஷன் இருக்கலாம். ஆனா ஓவர் ட்ராமா இருக்கக்கூடாது. சின்னத்தம்பியில கூட சொல்லியிருப்போம். கல்யாணம் பண்ணப் போறவனே யார் வரப் போறான்னு பாட வைக்கிறாங்களேன்னு ஒரு அனுதாபம் பிறக்கும். அந்த சூழலுக்கு உண்டான அழுத்தமே அதிகமாகிடும். எல்லாரும் அதுக்குள்ள இறங்கிடுறாங்க. பசியை மறக்குது குழந்தை.

சின்னத்தம்பி பாட ஆரம்பிச்சிடுறான். பாட்டை மாத்தாதீங்கன்னு சொல்றாங்க. என்னம்மா நந்தினி இப்படி சொல்லுதுன்னு சொல்லும்போது ஆமாண்டா அதான்டா கல்யாணம்னு சொல்லும்போது எங்கே தெரியப்போகுது.

Annamalai

Annamalai

போவோமா ஊர்கோலம் பாட்டுல ஆடியன்ஸ்சுக்கு பயத்தைக் கொண்டு வரணும்னு நினைச்சோம். அந்தப் பாடல் ஒரு என்ஜாய்மெண்ட்டாகவும் இருக்கும். அண்ணன்கள் பார்த்துருவாங்களோன்னு பயமும் இருக்கும். அதனால அந்த சூழல் அழுத்தத்தை உண்டாக்கிவிடும்.

என்டர்டெயின்மென்ட், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாத்தையும் கலந்து கொடுக்கும்போது அதைப் பார்க்கணும்னு தோணும். சைலன்ட்டா நடிக்கிறவங்களை எல்லாரும் விரும்பிப் பார்ப்பாங்க. அதே நேரம் குழந்தைங்க மனசுல இடம்பிடிக்கறவங்க தான் சூப்பர்ஸ்டார்.

Also read: ரஜினிகாந்துக்கு மறக்க முடியாத பிறந்தநாள்… அப்போது நடந்த தரமான சம்பவம்

அதே மாதிரி அண்ணாமலை படத்தை என்னைப் பண்ணச் சொல்லி ரஜினி கேட்டாருன்னும் இதே பேட்டியில் வாசு தெரிவித்துள்ளார். அதே போல நடிகன் படத்தோட ரீமேக்கிங்கில் விஜய் ஆர்வம் காட்டியதையும் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in throwback stories

To Top