Connect with us
goundamani

latest news

கவுண்டமணியை பாராட்டி சிவாஜி சொன்ன அந்த வார்த்தை!.. இயக்குனர் பகிர்ந்த தகவல்!..

Goundamani: கோவையை சேர்ந்த சுப்பிரமணியன் கருப்பையா நாடகங்களில் நடித்து வந்தார். எப்படியாவது சினிமாவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். கருப்பு வெள்ளை சினிமா ஓடிக்கொண்டிருந்த காலத்திலேயே வாய்ப்புகள் தேடினார். சிவாஜி, நாகேஷ் ஆகியோர் நடித்த படங்களில் ஒரு காட்சிகளில் வரும் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார்.

பாக்யராஜும் இவரும் ஒரே ஊர்காரர்கள் என்பதால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. பாரதிராஜா 16 வயதினிலே படம் எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் சுப்பிரமணியை அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகம் செய்து அந்த படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் நடிக்க வைத்தார். ‘பத்த வச்சிட்டியே பரட்டை’ என அவர் பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்தது.

நிஜப்பெயர் சுப்பிரமணி என்றாலும் அவரை எல்லோரும் கவுண்ட்டர் மணி என்று அழைத்தார்கள். ஆனால் 16 வயதினிலே படத்தின் டைட்டில் கார்டு போடும்போது அது கவுண்ட மணி என தவறாக போடப்பட அதுவே அவரின் பெயராக மாறிப்போனது. அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் இனிமேல் நடித்தால் ஹீரோதான் என முடிவெடுத்து அடம்பிடித்து ஹீரோவாக மட்டுமே நடித்தார்.

Goundamani
Goundamani

ஆனால் அப்படி நடித்த படங்கள் ஓடவில்லை. ஆனாலும் கவுண்டமணி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கள நிலவரத்தை புரிந்து கொண்டு மீண்டும் காமெடியனாக நடிக்க தொடங்கி சினிமாவில் கோலோச்சினார். தன்னோடு செந்திலை சேர்த்துக்கொண்டு அவர் அடித்த லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

80,90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் ஹீரோவுடன் எல்லா காட்சிகளிலும் வரும் இரண்டாவது ஹீரோ போல மாறினார். கவுண்டமணி இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலையும் உருவானது, 70, 80களில் பிறந்தவர்கள் இப்போதும் கவுண்டமணியின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். பல படங்களிலும் அவர் செய்த காமெடிகளை இப்போதும் சிலாகித்து பேசுகிறார்கள். இப்போதும் தொலைக்காட்சிகளில் கவுண்டமணி காமெடி பார்க்கும்போது ரசிக்கிறார்கள் அதுதான் கவுண்டமணியின் மெகா வெற்றி.

சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், ராமராஜன் போன்ற பல நடிகர்களின் படங்கள் வெற்றியடைய கவுண்டமணி காரணமாக இருந்திருக்கிறார். அதனால்தான் ஹீரோவை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கினார். தற்போது வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கவுண்டமணி.

இந்நிலையில்தான் ரஜினி, பிரபு, சத்யராஜ் ஆகியோரை வைத்து பல படங்களை இயக்கிவரும், தனது 90 சதவீத படங்களில் கவுண்டமணியை பயன்படுத்தியவருமான பி.வாசு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சிவாஜி சார் ஒரு முறை என்னிடம் ‘கவுண்டமணி காலத்துல நாம வாழ்றதெல்லாம் பாக்கியம்’ என்று சொன்னார். சிவாஜி சார் எத்தனை தலைமுறையுடன் நடித்திருக்கிறார். ஆனால் அவரின் மகன் தலைமுறையை சேர்ந்த ஒரு நடிகரை இப்படி பாராட்டி பேசியது பெரிய விஷயம்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார். இதிலிருந்து கவுண்டமணியின் காமெடிகளை நடிகர் திலகமும் ரசித்திருக்கிறார் என்பது புரிகிறது.

Continue Reading

More in latest news

To Top