
Gossips
கமல்ஹாசனே சொன்னாலும் எனக்கு வேண்டாம்.! விரட்டிவிட்ட அயலான் டீம்.! கடுப்பில் சிவகார்த்திகேயன்.!?
Published on
டாக்டர், டான் என தனது தயாரிப்பில் வெளியான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அடுத்ததாக அவரது லிஸ்டில் உள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை ரெமோ படத்தைத் தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாம். இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் வேலைகள் மட்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
ஆனால், அயலான் மிகவும் காலதாமதம் ஆவதால் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு திட்டம் தீட்டினாராம். கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்தப்படத்தை படத்தை வெளியிட்டால் நல்ல விளம்பரம் கிடைக்கும். படமும், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகிவிடும் என்று அதற்காக காய் நகர்த்தினாராம்.
அதன்படி கமல் தரப்பிலிருந்து ஒரு நபர் ஆர்.டி.ராஜாவிடம் அயலான் படத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் ஆர்.டி.ராஜா ஏற்கனவே ஹிந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு தியேட்டர் உரிமை, ஓடிடி, சாட்டிலைட் என பெரும்பாலான வியாபாரங்களை முடித்து அட்வான்ஸ் வாங்கி விட்டாராம்.
இதையும் படியுங்களேன் – ஒரு போன் கால் தான் வந்துச்சி.! வெலவெலத்து போய்ட்டாராம் அருண் விஜய்.! ‘மாறன்’ எபெக்ட்ஸ்..,
ஆதலால் இனி மிச்சம் இருப்பது தமிழ்நாடு தியேட்டர் உரிமம் மட்டும் தான். அதற்காக இதற்கு நாம் அந்த படத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். படத்தை தானே ரிலீஸ் செய்து கொள்வதாக கூறி விட்டாராம் ஆர்.டி.ராஜா. ஆதலால் இனி அயலான் படம் வெளியாகும் நாள் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கே தெரியும் என்று கூறப்படுகிறது.
தனது பிரமாண்ட படமாக எடுக்கப்பட்ட அயலான் திரைப்படம் ரிலீஸ் தாமதமாவது சிவகார்த்திகேயனுக்கு டான் வெற்றியை தாண்டி கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளதாம்.
Gossip: தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் அரசியல் பக்கம் தாவி இருக்கிறார். இருந்தும் அவரின் குடும்ப பிரச்னை புகைந்து...
Gossip: சூப்பர்ஸ்டார் நடிகரின் அரசியல் எண்ட்ரி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதை தங்களுடைய படத்துக்கு பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பு நிர்வாகம்...
Gossip: தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து நடிகர் எப்போதுமே கெத்துதான். மொத்த சினிமாத்துறைக்குமே அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவிலான லாபம்...
Gossip: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே டிவியில் இருந்து வந்து ஜொலிக்க முடியும் போல ஹீரோயின்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான். அந்த...
Gossip: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி உச்சத்துக்கு வந்திருக்கும் நடிகருக்கு சமீபகாலமாகவே நேரம் சரியில்லை. இதனால் தன்னுடைய ஃபேன் இயக்குனரை...