1. Home
  2. Throwback stories

அவங்க நடிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்... துணை நடிகைக்காக வடிவேலுவை பஞ்சராக்கிய விஜயகாந்த்

vijayakanth
வடிவேலுவை திட்டிய விஜயகாந்த்

கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி யார் வந்தாலும் அவர்களுக்காக உதவி செய்வதில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. எந்த நேரத்திலும் அவர்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யும் நபர் அவர்.

80களில் திரையுலகில் நுழைந்த அவர் முன்னணி இடத்தை பிடிக்க பல அவமானங்களை சந்தித்துள்ளார். ஆரம்ப காலங்களில் அவருடன் எந்த நடிகைகளும் நடிக்க தயங்கினர். ஆனால் ஒரு கட்டத்தில் யாரெல்லாம் நடிக்க மாட்டேன் என்றார்களோ அவர்களே விரும்பி நடித்தனர். நடிகர் சங்க தலைவராக இருந்த போது பல துணை நடிகர் நடிகைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளார். 

வடிவேலுவை பொறுத்தவரை  ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் அவருக்கான தனி அடையாளத்தை கொடுத்தது விஜயகாந்த் நடித்த சின்னகவுண்டர் படமே. அப்போது அப்படத்தில் நடித்த கவுண்டமணி வடிவேலு வேண்டாம் என்று இயக்குனரிடம் கூறினாராம். ஆனாலும் விஜயகாந்த் அவருக்கு  வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்புகளை கொடுத்தார். தன் வளர்ச்சிக்கு உதவிய விஜயகாந்தையே ஒரு கட்டத்தில் எதிர்த்தார் வடிவேலு. ஆனால் அதற்குரிய பலனையும் அனுபவித்தார் வடிவேலு.

actress girija

இந்த நிலையில் துணை நடிகை கிரிஜா என்பவர் பெட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மும்தாஜ் நடித்த தத்தி தாவுது மனசு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் வடிவேலு இந்த பெண்ணுக்கு நடிக்க தெரியாது எனவே வேண்டாம் என்று கூறினார்.இதனை  நான் விஜய்காந்த் சாருக்கு தெரியபடுத்தினேன். வடிவேலுவை தொடர்பு கொண்ட விஜயகாந்த், அந்த பொண்ணு நடிக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம், நீயா பணம் போட்டு படம் எடுக்குற, இல்ல நீ டைரக்டரா என்று கோபமாக திட்டினார். மேலும் அந்த பெண் நன்றாக நடித்தால் உன் சம்பளத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துவிடு என்று கூறினார். இதையடுத்து இதுவும் பேசாமல் தலை குனிந்தபடி சென்றார் வடிவேலு
 என்று கூறினார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.