லிவிங்ஸ்டனிடம் விஜயகாந்த் ஆசைபட்டு கேட்ட படம்...ஆனாலும் இன்று வரை ரிலீஸ் ஆகாத சோகம்
லிவிங்ஸ்டனிடம் விஜயகாந்த் ஆசைபட்டு எடுக்க சொன்ன படம்...ஆனாலும் இன்று வரை ரிலீஸ் ஆகாத சோகம்
பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் லிவிங்ஸ்டன். இயக்குனராக விரும்பி விஜயகாந்திடம் கதை சொல்ல வந்தார். ஆனால் அவர் நடிகராக அறிமுகம் செய்தார் விஜயகாந்த்.
தொடர்ந்து லிவிங்ஸ்டன் கேப்டன் பிரபாகரான்,பாட்டுக்கு நான் அடிமை என பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சூபப்ர் குட் பிலிம்ஸ் நிறுவனத்த்ல் சுந்தர புருசன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட். இந்த படத்தை பார்த்த விஜயகாந்த் லிவிங்ஸ்டனை அழைத்து தனது நிறுவனமான ராவுத்தர் பிலிம்ஸில் சுந்தர புருசன் மாதிரி படம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அட்வான்ஸாக 7.5 லட்சம் கொடுத்தாராம். இதனை லிவிங்ஸ்டன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தான் வாங்கிய முதல் அதிக தொகை என்றும், பைக்கில் இனி வரவேண்டாம் என்று கூறி கார் வாங்கி வாங்கிகொள்ளுங்கள் என்று ரூ. 5 லட்சம் கொடுத்தாராம் கேப்டன்.

விஜயகாந்த் ஆசைப்படி அந்த படத்தினை தொடங்கினர் லிவிங்ஸ்டன். உனக்கும் எனக்கும் கல்யாணம் என்ற பெயரில் அந்த படம் தொடங்கப்பட்டது. தேவயானி நாயகியாக நடிக்க சுந்தர புருசன் படத்திற்கு இசை அமைத்த சிற்பி அப்படத்திற்கு இசையமைத்தார். லிவிஸ்டன் கதையை பார்த்தசாரதி என்ற இயக்குனர் இப்படத்தை இயக்கினார். ஆனால் ஏனோ அப்படம் வெளியாகவில்லை.
