1. Home
  2. Throwback stories

Bison: ஒரே தேதியில் ரிலீஸ்!.. சியான் போலவே வருவாரா துருவ்?!.. வாட்ட கோ-இன்சிடன்ஸ்!.

dhruv

Chiyan Dhruv: சினிமாவில் போராடி மேலே வந்தவர் விக்ரம். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவருக்கு சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ‘நாம்தான் அழகாய் இருக்கிறோமே’ சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால் அப்படி வாய்ப்புகள் அவருக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை.

பலரிடமும் சென்று வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. அப்போதுதான் பாலாவின் இயக்கத்தில் சேது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது கடின உழைப்பை கொடுத்தார் விக்ரம். சேது படம் வந்த பிறகு ரசிகர்கள் அவரை ‘சீயான்’ என அழைக்க தொடங்கினர் .அதன்பின் அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது.

சேது படத்திற்கு பின் தூள், சாமி என ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார் சியான். சினிமாவுக்காக உடலை வருத்திக் கொள்ளும் நடிகர்களில் சியான் முக்கியமானவர். ‘ஐ’ படத்தில் இவர் கொடுத்து அபரிதமான உழைப்பை பலரும் பாராட்டினார்கள்.

தற்போது சீயான் விக்ரமின் மகன் துருவ் சினிமாவிற்கு நடிக்க வந்து விட்டார். இதற்கு முன் நடித்த இரண்டு படங்களும் அவருக்கு சரியான படங்களாக அமையவில்லை. அதில் ஒன்று தெலுங்கு ரீமேக். மற்றொன்றில் துருவ் ஹீரோ இல்லை. தற்போது மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள பைசன் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது.

துருவ் நடித்திருந்த மகான் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்த கடந்த மூன்று வருடங்களில் பயிற்சி எடுத்து கடுமையான உழைப்பை கொட்டி இருக்கிறார் துருவ்.
துருவின் அப்பா சியான் விக்ரம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான என் காதல் கண்மணி திரைப்படம் 1990ம் வருடம் 17 அக்டோபர்தான் வெளியானது.

தற்போது துருவ் ஹீரோவாக நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படமான பைசன் படமும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்த தகவலை சில ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ’ What a coincidence' என பதிவிட்டு வருகிறார்கள்.