'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் நடிக்க மறுத்த 2 ஹீரோக்கள்... கமலின் துணிச்சலை பாராட்டிய பாரதிராஜா!

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார். '16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு அவர் இயக்கிய மூன்றாவது படம் தான் 'சிகப்பு ரோஜாக்கள்'.
 
kamal bharathiraja sigappu rojakkal

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார். '16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு அவர் இயக்கிய மூன்றாவது படம் தான் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற இந்த படத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் சீரியல் கில்லராக வலம் வந்து ரசிகர்களை மிரட்டினார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் பாரதிராஜா அவருடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் 'சிகப்பு ரோஜாக்கள்' படம் குறித்து பேசுகையில் "நான் ஒரு ஆங்கில வார இதழில் ராமன் ராகவ் என்ற சீரியல் கில்லரை பற்றி படித்தேன்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அவன், மும்பைக்கு சென்று ஏன் தொடர் கொலைகள் செய்தான்? என்று அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அது 'சிகப்பு ரோஜாக்கள்'-ங்குற த்ரில்லர் படம் பண்ண எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. 

முதலில் இந்த படத்தில் நடிக்க இரண்டு ஹீரோக்களிடம் கதை சொன்னேன். ஆனால், இது நெகட்டிவ் ரோல் என்பதால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். அவங்க பெயர்களை என்னால் இப்போது சொல்ல முடியாது. அதன் பிறகு கமலிடம் சொன்னேன், அவர் மிகுந்த துணிச்சலுடன் ஓகே சொன்னார். அந்த கலைஞனை நான் பாராட்டியே ஆக வேண்டும்" என்று கூறியிருந்தார்.

From Around the web