4 Years of Vikram: கமலுக்கு கம்பேக் கொடுத்த விக்ரம் !

சரியான வெற்றிக்காக காத்திருந்த கமல்ஹாசனுக்கு பெரிய பிரேக்கை  கொடுத்த படம் விக்ரம்.
 
vikram movie

சரியான வெற்றிக்காக காத்திருந்த கமல்ஹாசனுக்கு பெரிய பிரேக்கை  கொடுத்த படம் விக்ரம்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜூன் 3, 2022) இப்படம் வெளியானது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையில் பத்தல பத்தல  என உலக நாயகன் போட்ட ஆட்டம் திரையரங்குகளை அதிரவைத்தது. கைதி  படத்தின் தொடர்ச்சியாக (LCU) இந்தப் படம் அமைந்தது ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு கமல்ஹாசன் மட்டுமே காரணமல்ல, அதில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் பங்களிப்பும் அளப்பரியது:
அமர் என்ற கதாபாத்திரத்தில் அவரது புலனாய்வு மற்றும் நடிப்பு படத்திற்குத் தூணாக அமைந்தது. சந்தனம்  என்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.

படத்தின் கடைசி 5 நிமிடங்களில் ரோலக்ஸ் ஆக சூர்யா கொடுத்த என்ட்ரி, இன்று வரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தியேட்டர் மொமண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

vijay sethupathi

தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, அப்போதைய நிலையில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது.


'விக்ரம்' வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல; அது ஒரு மல்டி-ஸ்டாரர்  கலாச்சாரத்தைத் தமிழ் சினிமாவில் மீண்டும் கொண்டு வந்தது. அனிருத்தின் பின்னணி இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் உலகத் தரத்தில் இருந்தது.

surya

நான்கு ஆண்டுகள் கடந்தாலும்,  ஏஜென்ட் விக்ரம்  மற்றும்  ரோலக்ஸ்  இடையேயான அந்த மோதலுக்காகவும், விக்ரம் 3-ம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் இன்றும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்

From Around the web