'பகவதி' கதையை சொன்னதும் தனக்கு செட்டாகுமான்னு தயங்கிய விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய ஏ.வெங்கடேஷ்!

 
Vijay Bagavathi

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த 'தளபதி' விஜய், இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார். இன்று (ஜூன் 22-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான 'ஜன நாயகன்' வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

விஜய்யின் கடைசி படமான இதை 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கியிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்தபோது, அவரை ஆக்ஷன் ரூட்டுக்கு மாற்றி விட்ட படம் தான் 'பகவதி'.

2002-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்க, முக்கிய ரோல்களில் ஜெய், ரீமா சென், வடிவேலு நடித்திருந்தனர். சமீபத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கொடுத்த பேட்டி ஒன்றில் 'பகவதி' குறித்து பேசுகையில் "நான் கமர்ஷியலா பக்கா மாஸா 'பகவதி' கதையை பண்ணிட்டேன். இந்த கதைல ஒரு ஆக்ஷன் ஹீரோவைத் தான் நடிக்க வைக்க வேண்டுமென நான் நினைத்து கொண்டிருந்தேன்.

அப்போ, ஒரு படம் பார்க்க தியேட்டருக்கு போனபோது, இடைவேளையில் விஜய் சார் நடிச்ச 'ஷாஜகான்' படத்தோட ட்ரெய்லர் போட்டாங்க. அதுல ஒரு ஷாட்ல விஜய் சார் சிகரெட் பத்தவச்சுட்டு தீக்குச்சியை ஸ்டைலா போடுவார். தியேட்டர்ல எல்லாரும் விசில் அடிச்சு கைத்தட்டுனாங்க. அப்ப எனக்கு ஸ்பார்க் ஆச்சு, இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகிருச்சு. இவரை வச்சு இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை பண்ணிடலாம்ன்னு முடிவெடுத்தேன்.

அடுத்த நாளே விஜய் சார்கிட்ட appointment கேட்டு, ஒரு மூன்று நாட்களில் அவரை நேரில் சந்தித்து கதை சொன்னேன். கதையை கேட்டதும் விஜய் சார் நல்லா இருக்கு பண்ணலாம்ன்னு சொல்லிட்டார். அப்புறம் அவர் இது பெரிய ஆக்ஷன் கதையா இருக்குதே, எனக்கு செட் ஆகுமாண்ணா அப்படின்னு கேட்டார். சார் இது கமர்ஷியல் படம் 100 சதவீதம் கரெக்ட்டா வரும், உங்கள இந்த படம் வேற ஒரு தளத்துக்கு கொண்டு போகும் சாருன்னு சொல்லி பண்ண வச்சேன். படம் அந்த வருஷம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி கமர்ஷியல் ஹிட்டாச்சு" என்று கூறியுள்ளார்.

From Around the web