ஷங்கர் சாரின் 'ஜென்டில்மேன்'-ஐ மிஸ் பண்ண 5 முன்னணி நடிகர்கள்... சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் ஏ.வெங்கடேஷ்!

 
Shankar gentleman a venkatesh

பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்த ஷங்கர் இயக்கிய முதல் படம் 'ஜென்டில்மேன்'. இதில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்க, இதை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தில் 'பகவதி, தம், ஏய்' போன்ற படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியிருந்தார்.

சமீபத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கொடுத்த பேட்டியில் 'ஜென்டில்மேன்' குறித்து பேசுகையில் "முதலில் இந்த கதையை சரத்குமார் சாரை வச்சு பண்ணலாம்ன்னு நான் ஷங்கர் சாரிடம் சொன்னேன். ஷங்கர் சாரும் சரத் சாரை சந்தித்து கதை சொல்ல, அவரும் ஓகே நடிக்கிறேன்னு சொல்லிட்டார்.

அடுத்து தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சாரிடமும் கதை சொல்லி ஷங்கர் சார் அட்வான்ஸ் வாங்கிட்டார். அப்புறம் கால்ஷீட் பிரச்சனையால சரத் சார்னால பண்ண முடியாம போயிருச்சு. 

Sarathkumar Rajashekar karthik

அதுனால நாங்க நடிகர்கள் ராஜசேகர் சார், கார்த்திக் சார் உட்பட 5 முன்னணி ஹீரோக்கள்கிட்ட இந்த கதையை சொன்னோம். ஒவ்வொருத்தரும் கால்ஷீட் பிரச்சனை, சம்பளம்ன்னு வெவ்வேறு காரணங்களால பண்ண முடியாம போயிருச்சு.

அப்போ தான் அர்ஜுன் சார் நடிச்ச 'சேவகன்' படம் வந்திருந்துச்சு. நாங்க உடனே அந்த படத்தை போய் பார்த்தோம். அப்புறம் தான் அர்ஜுன் சார் 'ஜென்டில்மேன்' கதைக்கு செட் ஆவாருன்னு முடிவு பண்ணி அவரை கமிட் பண்ணோம்" என்று கூறியுள்ளார்.

From Around the web