அவனை வெளியே போக சொல்லு..இல்லனா...மகேந்திரனால் கடுப்பான விக்ரமன்
புது வசந்தம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் விக்ரமன். குடும்பபாங்கான படங்களை எடுப்பதில் சிறந்தவர் இவர். இவரது இயக்கத்தில் பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சூர்யவம்சம், வானத்தை போல மற்றும் உன்னை நினைத்து என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இவர்.
விக்ரமன் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர் இவர். அப்பேற்பட்டவரையே கடுப்பாக்கியுள்ளார் நடிகர் மகேந்திரன். சமீபத்தில் மின்வெட்டு குறித்து மகேந்திரன் கூறிய கருத்தால் கோபமடைந்த நெட்டீசன்கள் அவரை கடந்த இரண்டு நாட்களாக வைத்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் பாவா லட்சுமணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியபோது, சூர்யவம்சம் படத்தில் நான் புரொடெக்சன் மேனேஜராக பணியாற்றினேன். அப்போது சரத்குமார் பேரனாக நடிக்க ஒரு சிறு வயது நடிகர் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது மாஸ்டர் மகேந்திரனை கூட்டி வந்தோம். அவர் ஸ்பாட்டுக்கு வந்ததும் எத்தனை ஷாட் எடுப்பீங்க, கேமரா ஆங்கிள் எங்க வைப்பீங்க, என் டயலாக் என்ன என்று கேட்டான். இதனை கண்ட விக்ரமன் அவனை உடனே வெளியே போகச் சொல்லு, இல்லையென்றால் அடித்தே கொ**ன்றுவிடுவேன் என்றார். அதன் பிறகுதான் ஹேமலதா என்ற பெண்ணை ஆணாக நடிக்க வைத்தோம் என்றார்.
