இளையராஜா காட்டிய கோபம்!.. கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. பாக்யராஜிடம் சேர்ந்தது எப்படி?...
மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் நடிகராக மாறியவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்த அவரை விஜயகாந்த் தான் நடித்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் நடிகராக மாற்றினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் லிவிங்ஸ்டன் நடித்தார். சசி இயக்கத்தில் இவர் நடித்த சொல்லாமலே திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது..
அதேபோல் லிவிஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தர புருஷன் திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது கே.பாக்யராஜ் மறைந்துவிட்ட நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிவிங்ஸ்டன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
பாக்யராஜ் சாரின் ஒரு படத்திற்கு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜை நடந்து கொண்டிருந்தது. இளையராஜா சார் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிர்நுதார். அப்போது எனக்கு எதுவும் தெரியாது.. நேராக இளையராஜாவிடம் சென்று அவரின் தோளை தட்டி ‘நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டேன்.. இளையராஜா என்னை பார்த்து முறைத்தார். அருகில் இருந்த அவரின் உதவியாளர் என்னை கழுத்தை பிடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்..
யார்யா நீ? எங்க வந்து வாய்ப்பு கேக்குற? என என்னை கண்டபடி திட்டினார்.. என் அப்பா கூட என்னை அப்படி திட்டியதில்லை. நான் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்தேன்.
இதை பாக்யராஜ் சார் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளர்களை அனுப்பி என்னை கூப்பிட்டார்..
அவரிடம் சென்றதும் ‘யாரு நீ? அவர்கிட்ட போய் என்ன கேட்ட?’ என்று கேட்டார். \இல்ல சார் நான் நல்லா பாடுவேன்.. அதான் அவரிடம் வாய்ப்பு கேட்டேன்’ என்று சொன்னேன். ‘ அதுக்கு இப்படியா போய் கேட்ப?’ என்று சொல்லி என்னை அவரின் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். இப்படித்தான் என் சினிமா வாழ்க்கை துவங்கியது.. அவருடன் பணி புரிந்ததெல்லாம் மலரும் நினைவாக இருக்கிறது’ என்று சொல்லி லிவிங்ஸ்டன் அதற்குக் மேல் பேச முடியாமல் கண் கலங்கினார்.
