சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

 
சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

பொதுவாக படப்பிடிப்புத் தளத்தில் அந்த டைரக்டருக்கு யாராவது நடிகர்கள் ஆலோசனைக் கூறினால் பெரும்பாலான டைரக்டர்கள் அந்த ஆலோசனையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் இந்த இயக்குனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் எல்வி.பிரசாத்.

ஒரு வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி துக்கத்தில் இருப்பார்கள் என்ற காட்சியைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் எல்வி.பிரசாத். வீட்டு வேலைக்காரன் கேவி கேவி அழ, இன்னும் கொஞ்சம் அழு. இன்னும் கொஞ்சம் அழுன்னு காட்சிகளைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் பிரசாத். 'கொஞ்சம் கட் சொல்றீங்களா"ன்னு நாகேஷ் சொல்ல, எதுக்காகக் கட் பண்ணச் சொன்னன்னு கேட்கிறார் எல்வி.பிரசாத். ;'சார் செத்தது வீட்டு எஜமானி.

அந்த அம்மா புருஷனே அப்படி அழல. வேலைக்காரன் இந்தளவுக்கு விக்கி விக்கி அழுதான்னா படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு சந்தேகம் வராதா?" என்று டைரக்டரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நாகேஷ். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டரைப் பார்த்து இப்படி ஒரு நடிகர் சொன்னாருன்னா, 'தம்பி இந்தக் காட்சியை எப்படி படமாக்குவதுன்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு. செட்டை விட்டு வெளியே போ. காட்சிகளைப் படமாக்கி விட்டு உன்னை கூப்பிடுறேன"; என்பார்.

ஆனால் இங்கு நடந்தது அப்படி அல்ல. டைரக்டரிடம் நாகேஷ் இப்படி சொன்னார். எஜமானி இறந்த துக்கத்தைத் தாங்கிக்கிட்டு அப்படி வெளியே போய் துண்டை எடுத்துட்டு வாயைப் பொத்தியபடி அழுதான்னா ரொம்ப நல்லாருக்கும்னு நாகேஷ் சொன்னார். அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு திரைக்கதையைப் படமாக்கியதோடு மட்டும் இல்லாமல் நாகேஷைப் பார்த்து எல்வி.பிரசாத் ஒண்ணு சொல்றாரு. அதுதான் முக்கியம்.

'நாகேஷ் ஒரு டைரக்டராகக்கூடிய எல்லா திறமையும் உங்கிட்ட இருக்கு" என்று அவரைப் பாராட்டி இருக்கிறார் எல்வி.பிரசாத். இந்த பெருந்தன்மை எல்லாம் எத்தனை இயக்குனர்ககள்கிட்ட எதிர்பார்க்க முடியும்? என்று கேட்கிறார் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

From Around the web