1.5 கோடி ரூபாய் தரேனு சொன்னாங்க..ஆனாலும் மறுத்த ராஜ்கிரண்
எல்லாமே என் ராசாதான் ப்படம் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் னடிகர ராஜ்கிரண். ஆரம்பத்தில் திரைப்பட தயரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி, பின்பு வினியோகஸ்ஹராக மாறினார். ஒரு கட்டத்தில் தயரிப்பாளராகவும் உயர்ந்தவர் இவர். ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா படம் இவர் தாரித்ததே.
கதாநாயகனாக தொடர்ந்து 3 வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜ்கிரண். அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவரும் இவரே.
இந்த நிலையில் ஒரு நிறுவனம் அவருக்கு பெரிய சம்பளம் பேசியும் அந்த நிறுவன் விளம்பரத்தில் ராஜ்கிரண் நடிக மறுத்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியபோது,
நான் எப்பவுமே வேட்டியில் இருப்பதால் வேட்டி விளம்பரத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. மற்ற நடிகர்களுக்கு ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 5 லட்சம் கொடுப்போம் உங்களுக்கு டபுள்னு சொன்னங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியாக 25 லட்சம் 50 லட்சம் ஒரு கோடி வரை போச்சு ஆனாலும் மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டல் தொனியில் ஒன்றை கோடி தருகிறோம் மறுக்காதிங்க என்று கூறினார்கள். நான் அப்பவும் மறுத்தேன். பின் அந்த விளம்பர நிறுவனம் ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டனர். வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்துகிற உடை, மிஞ்சி போனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா அந்த காசையும் அவங்க கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க அதனால் வேண்டாம் என்றேன் என்று ராஜ் கிரண் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
