Dharaman: ராமராஜன் பட டைட்டிலை சுட்டு ரஜினிக்கு வச்சிட்டாங்களே!... இது தெரியாம போச்சே!...

 
dharman


ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு தர்மன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 30 வருடங்களுக்கு பின் ரஜினியின் பழைய பட ஸ்டைலில் இந்த டைட்டில் ரஜினிக்கு அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ஒரு டெரர் மருத்துவராக ரஜினி நடித்திருப்பதாக அஸ்வத் மாரிமுத்து சொல்லியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியிருக்கிறது. பாடல் காட்சியையும், சண்டை காட்சியையும் படக்குழு எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் தர்மன் என்கிற படம் உருவானது பலருக்கும் தெரியாது. மறைந்த எவர்கிரீன் வி.ஏதுரை அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் மகாராஜன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரிடம் பணியாற்றிய காவேரி வேந்தன் என்பவர்தான் தர்மன் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ராமராஜன் நடிக்கவிருந்தார்..

dharman

2005  ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து அதன்பின் நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளருக்கு மற்ற படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படம் அப்போது நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ராமராஜன் படத்திற்கு வைத்த தலைப்பைத்தான் தற்போது ரஜினி படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web