என் மச்சான் ஜிவி பிரகாஷ் செய்த உதவி!.. மறக்கவே மாட்டேன்.. சதீஷ் ஃபீலிங்...

 
satish gv prakash

தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அதன் திரைப்படங்களின் நடிக்க தொடங்கியவர்தான் நடிகர் சதீஷ். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், ரெமோ உள்ளிட்ட பல படங்களிலும் இவர் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் சதீஷ் நடித்திருக்கிறார். அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. மேலும் காமெடி நடிகராக கூட ஒரு முக்கிய இடத்தை தற்போது வரை சதீஷ் பிடிக்கவில்லை. அதற்கான படங்கள் அமையும் என்கிற நம்பிக்கையோடு சதீஷ் காத்திருக்கிறார்.

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய சதீஷ் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். நான் பண ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் எனக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் என்னிடம் பணம் இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம சில பேரிடம் கடனாக கேட்டேன். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட ஜிவி மச்சான் வந்து ‘இத வச்சுக்கோ’ அப்படின்னு அவ்வளவு பெரிய கதையை கொடுத்தான். கொடுத்துட்டு ‘மச்சான் நீ இதை திருப்பி தர வேண்டாம்’ என்று சொன்னான். பணத்தை திருப்பி கொடுக்க நிலையிலும் அப்போது நான் இல்லை.. ‘அவ்ளோ பெரிய மனசு மச்சானுக்கு’ என்று நெகிழ்ழ்ந்து பேசியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5199 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web