சோ கேட்ட அந்தக் கேள்வி… தங்கவேலு சொன்ன சூப்பர் பதில்!

 
சோ கேட்ட அந்தக் கேள்வி… தங்கவேலு சொன்ன சூப்பர் பதில்!

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும்னு நம் முன்னோர்கள் சொல்வாங்க. அது நிஜம் தான். நெல்லைக் கொட்டுனா அள்ளிடலாம். சொல்லைக் கொட்டுனா அள்ள முடியுமா? அதனால எந்த ஒரு வார்த்தையையும் பார்த்து தான் பேச வேண்டும். தேவையில்லாத வார்த்தைகள் பேசுவதால எத்தகைய பின்விளைவுகள் உண்டாகும்னு பார்க்கலாமா..!

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவைப் பொருத்தவரைக்கும் ''நீ உருப்படவே மாட்டே. நாசமாப் போயிடுவ...'' போன்ற வார்த்தைகளை எந்தக் காலத்திலும் அவர் பேசவே மாட்டார். படங்களில் அதுமாதிரி வசனங்கள் இருந்தாலும் கூட அதை எல்லாம் தவிர்க்கப் பார்ப்பார் தங்கவேலு. அதைப்பற்றி ஒருநாள் பேசிக்கொண்டு இருந்தபோது சோ அவரிடமே கேட்டார்.

''இதுமாதிரி பேசுறதால நெஜமாகவே அடுத்தவங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்னு நினைக்கிறீங்களா?''ன்னு கேட்டார். நினைக்கிறது மட்டும் இல்ல. என் வாழ்க்கையிலயே அதுமாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்குன்னு சோ விடம் சொன்னார் சோ.

ஒரு சமயம் என் கையில காசு இல்லாம இருந்தபோது என்எஸ்.கிருஷ்ணன்கிட்ட உதவி கேட்டுப் போனேன். ஒரு 200 ரூபாய் இருந்தா கொடுங்கன்னு அவரிடம் கேட்டேன். உடனடியாக பாக்கெட்டில் இருந்து 200 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்ததோடு நிற்கல.

''இந்தா 200 ரூபாய். என் மகாலெட்சுமியையே எடுத்து உன் கையில கொடுத்து விட்டேன்''னு சொல்லிக் கொடுத்தார். அப்படி அவர் கொடுத்ததுக்கு அப்புறம் அவர் வாழ்க்கையிலேயே பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பணத்துக்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். இதுக்கு என்ன சொல்றது?

இதனாலதான் அறம் தவிர்க்கும் வார்த்தைகளை நான் எப்பவுமே பேசுவதில்லை. நானும் பேச மாட்டேன்னு சோவுக்கு விளக்கம் கூறினாராம் கே.ஏ.தங்கவேலு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

From Around the web