ஒரே ஒரு கையெழுத்து.. கோடிக்கணக்கில் நஷ்டம்! குடும்பத்தாரால் நடுத்தெருவுக்கு வந்த வேதாளம் பட நடிகை!

 
ஒரே ஒரு கையெழுத்து.. கோடிக்கணக்கில் நஷ்டம்! குடும்பத்தாரால் நடுத்தெருவுக்கு வந்த வேதாளம் பட நடிகை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை சுதா. திரைப்படங்களில் எப்போதும் சிரித்த முகத்துடன், அம்மாவாகவும், அக்காவாகவும் நடிக்கும் இவரின் நிஜ வாழ்க்கை பல வலிகளும் சோகங்களும் நிறைந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

1984-ஆம் ஆண்டு வெளியான மோகன், ஊர்வசி நடித்த ஓ மானே மானே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் சரத்குமார் நடித்த கேப்டன், செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி , சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் , மற்றும் அஜித்குமார் நடிப்பில் வெளியான வேதாளம், லக்கி பாஸ்கர் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. இதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர். ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர்.

சினிமாவில் சம்பாதித்த தொகையை முழுவதும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் அந்த தொழில் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் மேலும் ஒரு ஹோட்டலை தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக பிசினஸில் ஏற்பட்ட சில சதிகளால், அவர் போட்ட ஒரே ஒரு தவறான கையெழுத்து அவருக்கு மாபெரும் வினையாக முடிந்தது. அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தும் காணாமல் போய், மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டதால், அவரது மகனுக்கும் சுதாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவரது மகன், சுதாவை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இதுமட்டுமின்றி, அவரது கணவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த தகவலை ஒரு பேட்டி ஒன்றில் சுதா பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

From Around the web