ஜாலி டூர் அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!.. அடடே கூட யாருன்னு பாருங்க!..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது தாயுடன் வெளியே சென்று உணவருந்திய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது பிஸியான வேலைகளுக்கு இடையே தனது தாயுடன் நேரத்தை செலவிடும் தருணங்களை அவர் பகிர்ந்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நடித்த சங்கராந்திகி வஸ்துன்னாம், ஓ சுகுமாரி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நாகார்ஜுனா நடிக்கும் ‘கிங் 100’ திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். நாகார்ஜுனாவின் 100-வது படமாக உருவாகும் இப்படத்தின் மூலம் தெலுங்கில் அவரது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், கன்னடத்தில் உருவாகும் ‘உத்தரகாண்டா’ படமும் அவரது வரவிருக்கும் படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், தாயுடன் மகிழ்ச்சியாக உணவருந்தி நேரத்தை செலவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முன்பு போல பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், டோலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர், அடிக்கடி வெளிநாடுகளுக்கும் டூர் அடித்து வருகிறார்.
