விக்ரம் சாரோட 'கோப்ரா' தோல்விக்கு இதுதான் காரணம்... ஓப்பனாக சொன்ன இயக்குநர் அஜய் ஞானமுத்து!
கோலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தை ஹாரர் ஜானரில் கொடுத்தவர் தான் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அந்த படம் தான் 'டிமான்ட்டி காலனி'.
அருள்நிதி நடித்திருந்த இந்த படத்தின் பார்ட் 2 2024-ல் ரிலீஸ் ஆனது. இதற்கிடையில் அஜய் ஞானமுத்து இரண்டு படங்களை இயக்கினார். அதில் நயன்தாரா - அதர்வா நடித்த 'இமைக்கா நொடிகள்' ஆடியன்ஸிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால், இவர் 'சீயான்' விக்ரமை வைத்து இயக்கிய 'கோப்ரா' படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றியது. இதை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' எஸ்.எஸ்.லலித் குமார் தான் தயாரித்திருந்தார். சமீபத்தில், இயக்குநர் அஜய் ஞானமுத்து கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "நான் விக்ரம் சாருக்காக முதல்ல பண்ண கதை ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் ஜானர்ல இருந்துச்சு.
அதுல ஒரு 4 மாசம் வொர்க் பண்ணேன். ஆனா, இது ரொம்ப futuristic-ஆ இருக்கு வேற பண்ணலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சார் அப்பாவும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் சாரை மீட் பண்ணி, நானும் அவரும் சேர்ந்து ஒரு பீரியட் டிராமா ஸ்கிரிப்ட் டெவலப் பண்ணோம். ஆனா, அதுவும் ரொம்ப பெரிய scale-ஆ இருந்துச்சு. நம்ம கொஞ்சம் யோசிச்சு தான் கை வைக்கணும்ன்னு நினைச்சேன்.
இதுக்கும் ஒரு 4 மாசம் போச்சு, மொத்தம் 8 மாசம் இந்த ரெண்டு கதைகள்ல போயிருச்சு. ஷூட்டிங் போறதுக்கு இன்னும் 4 மாசம் தான் இருக்கு. ஏன்னா, விக்ரம் சார் கால்ஷீட் அப்போ இருந்து தான் கொடுத்திருக்கார். அப்போ படத்தோட தயாரிப்பாளர், ஒரு எழுத்தாளர் சொன்ன கதை நல்லா இருக்குன்னு சொல்லி என்கிட்ட சொல்ல வச்சாங்க.
அந்த கதையை வாங்கி தான் நான் திரைக்கதை பண்ணேன். இதுல என்ன பிரச்சனைன்னா, படத்தோட மூலக்கதை நல்லா இருக்கு. ஆனா, அந்த கதை சின்ன வயசுல நடக்குறது தான் பிரச்சனையே. விக்ரம் சார் மாதிரி ஒரு பெரிய ஹீரோ படத்துல, அவ்ளோ பெரிய சின்ன வயசு flashback வச்சோம்ன்னா ஆடியன்ஸ் ஹீரோவோட கனெக்ட் ஆகி பாக்காம வெளில வந்திருவாங்க. சோ, நாங்க திரைக்கதைல flashback scenes-அ பிச்சு பிச்சு வச்சு அந்த பிரச்சனைய பேலன்ஸ் பண்ண என்னென்னமோ பண்ணி பாத்தோம். ஆனா, அது வொர்க் ஆகல" என்று கூறியுள்ளார்.
