அஜித்தின் திருப்பதி படம் உருவானதன் பின்னணி… அட அவரா காரணம்?
அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம் திருப்பதி. பேரரசு இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஏவிஎம். நிறுவனம் தயாரிக்கக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகம் திருட்டு விசிடியால் பாதிப்புக்குள்ளானது.
இதனால் அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து திருட்டு விசிடி பாதிப்புக்காக மனு கொடுத்தோம். அதன்பிறகு திருட்டு விசிடியை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் ஏவிஎம்.சரவணன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
ஏவிஎம். நிறுவனம் திருட்டு விசிடியின் பாதிப்பால தொடர்ந்து படம் எடுக்க முடியல. அதனால படம் எடுப்பதையே நாங்க தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளோம் என்றும் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து திருட்டு விசிடிக்காக கடுமையான சட்டங்களை இயற்றியதற்குப் பின்னால ஜெயலலிதாவிடம் இருந்து ஏவிஎம்.சரவணனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
நாளை காலை என்னை கோட்டைக்கு வந்து சந்தியுங்கள் என்றார் ஜெயலலிதா. அதன்படி சந்தித்தார் ஏவிஎம்.சரவணன். உங்க நிறுவனத்தைப் பொருத்தவரைக்கும் அன்னை, நானும் ஒரு பெண் என தரமான படங்களை எடுத்த நிறுவனம். நீங்க போய் படத்தயாரிப்பை நிறுத்தலாமா..? நீங்க சொன்ன பிரச்சனைக்கு எல்லாம் என்னால என்ன முடியுமோ அந்தளவு தீர்வு கண்டு இருக்கேன்.
அதனால நீங்க தொடர்ந்து படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று ஏவிஎம்.சரவணனைக் கேட்டுக் கொண்டார். ஒரு திரைப்படத் தொழில் நசிந்து விடக்கூடாது என்பதற்காக எந்தளவுக்கு ஜெயலலிதா ஆர்வமாக இருந்துள்ளார் என பாருங்க. அப்படி ஜெயலலிதா சொன்னதின்பேரில் ஏவிஎம். நிறுவனம் ஆரம்பித்த படம்தான் அஜித் நடித்த திருப்பதி. அந்தப் படத்தைப் பேரரசு இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
