Ajith: விஜய் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணு!.. இயக்குனரிடம் சொன்ன அஜித்!..
நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோக்களாக மாறி அதன் பின் மாஸ் நடிகர்களாக மாறினார்கள். பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் அஜித் மாஸ் ஹீரோவாக மாறினார்.. அந்த பக்கம் திருமலை, பகவதி உள்ளிட்ட படங்கள் மூலம் விஜய் மாஸ் நடிகராக மாறினார்..
சினிமாவில் இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே வலம் வருகிறார்கள். இருவருக்கும் இடையே நல்ல அன்பும், மரியாதையும், புரிதலும் எப்போதும் உண்டு. அஜித்தின் படத்தை விஜய் பார்ப்பதும், விஜயின் படத்தை அஜித் பார்ப்பதும் எப்போதும் நடக்கும்.. விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு கூட அஜித் வாழ்த்து கூறியிருந்தார். அதேபோல், அஜித்தின் தந்தை மற்றும் தாய் இருவரும் காலமான போது விஜய் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்தவரும், அதர்வாவை வைத்து இதயம் முரளி படத்தை இயக்கியவருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். 'ஒரு தீபாவளி நேரத்தில் விஜய் சாரின் சர்க்கார் படம் வெளியானது. அஜித் சாருக்கு நான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது தெரியும். அப்போது நான் அஜித் சாரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர் என்னிடம் ‘நீ விஜய் ரசிகன்தானே.. நாளைக்கு உன் தலைவன் படம் வருது.. முதல் ஷோ பாக்கணும்.. அதானே.. விஜய் எனக்கும் நண்பர்தான்.. எனக்கும் டிக்கெட் போடு.. நானும் வந்து உன்கூட படம் பாக்குறேன்’ என்று சொன்னார்’ என கூறியிருக்கிறார்..
