ஒரு வருடம் படம் ஓடினா வெற்றியா? அமீருக்குப் பாடம் புகட்டிய ஸ்ரீதர்!

 
sridhar, ameer

பருத்தி வீரன்... இது இளைஞர்களை ஒரு காலத்தில் செமயாக ஆட்டம் போட வைத்த படம். ஒரு வருடம் ஓடி ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் துள்ளச் செய்தது. இந்தப் படத்தில் தான் கார்த்தி அறிமுகம். படத்தை இயக்கியவர் அமீர். இவர் தன் வாழ்க்கையில் நடந்த மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு இயக்குனர் ஸ்ரீதர் உடன் தான் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் என்ன சொல்றாருன்னு பாருங்க. 

புதுமை இயக்குனரான ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டுல இருந்த காலகட்டத்துல அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அமீருக்குக் கிடைத்தது. அமீரை இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகப்படுத்தி வைத்த மனைவி தேவசேனா, இவர் தான் அமீர். இவர் டைரக்ட் பண்ண படம்தான் பருத்திவீரன். அது ஒரு வருடம் ஓடியது என்றார். உடனே ஒரு சிரிப்பு சிரித்த ஸ்ரீதர், ஒரு வருஷம் ஓடுனா தான் வெற்றிப்படமா என்ன? என்னோட கல்யாணப்பரிசு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் எல்லாம் பல வாரங்களைக் கடந்து ஓடிருக்கு. ஆனா நான் அதை எல்லாம் வெற்றியாக எடுத்துக் கொண்டதே இல்லை.

ஒரு படத்தோட வெற்றி என்பது எது தெரியுமா? படம் பார்க்குறவனை பல நாள்களுக்கு தூங்க விடாமல் பண்றதுதான் ஒரு உண்மையான படத்தின் வெற்றி. உருக்கமான படமா இருந்தால், பார்க்குறவனை அது கதற வைக்கும். மகிழ்ச்சியான படம்னா எல்லா கஷ்டத்தையும் மறந்து அவனைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அதுதான் படைப்பாளியோட வெற்றி. ஒரு படத்துக்கு கதை மனசுல உருவாகிடுச்சுன்னா அதுக்கு அப்புறம் நான் இந்த உலகத்தையே மறந்துடுவேன். சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அந்தக் கதையைப் பத்தியே தான் நினைச்சிக்கிட்டு இருப்பேன்.

படப்பிடிப்பு தினத்தன்று செட்டுக்கு போறதுக்கு முன்னாடி அந்தப் படத்துக்கான வசனங்கள், ஷாட் எல்லாம் ரெடியா இருக்கும். என்னுடைய குறிப்புகளை அறிந்து கொண்டு, என்னுடைய உதவியாளர்கள் பரபரப்பாக வேலை செய்வார்கள். படப்பிடிப்பு தளத்துல நான் உட்கார்ந்து யாராலும் பார்த்து இருக்க முடியாது. ஓடிக்கிட்டே இருப்பேன். காலம் இப்படி என்னை உட்கார வச்சிட்டுன்னு ஸ்ரீதர் சொன்ன போது, என் கண்கள் கசிந்ததை என்னால நிறுத்தவே முடியல.

என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு முன்னோடியாக இருந்த பல இயக்குனர்களை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுல ஸ்ரீதரை சந்தித்து நான் பேசியதுதான் என் வாழ்க்கையிலேயே மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு என ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் அமீPர். 

Tags

From Around the web