அண்ணாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு அமைந்து இருந்தால், நடிகவேளின் லெவலே வேற!

 
anna, mr radha

 

நடிகவேள் எம்ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்ப்பதற்கு பலமுறை அறிஞர் அண்ணா வந்திருக்கிறார். ஒருமுறை எம்ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் பல முறை ஆங்கிலப்படங்களைப் பார்த்து இருக்கிறேன். ஆங்கில நடிகர்களில் பால்முனியின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். குட் டே, ஜெமினி சோலார் போன்ற படங்களில் மிகச்சிறந்த நடிப்பை பால்முனி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்றைக்கு இந்த நாடகத்தைப் பார்க்கும்போது எம்ஆர்.ராதா அந்த பால்முனியின் நடிப்பை மிஞ்சிவிட்டார் என்றே தோன்றுகிறது.

திராவிட சரித்திரத்தை நான் தான் எழுதுவேன். அப்படி சரித்திரம் எழுதும்போது எம்ஆர்.ராதாவுக்கு நிச்சயமாக ஒரு அத்தியாயமே ஒதுக்கப்படும். ராதா நாடகத்தில் செய்து வரும் தொண்டு வருங்காலத்தில் பகுத்தறிவு ஆட்சி தமிழகத்தில் ஏற்பட ஒரு அஸ்திவாரமாக அமையும் என்றார் அண்ணா.

அவர் குறிப்பிட்டதைப் போல 1967ம் ஆண்டு திராவிட அரசு அமைந்தது. ஆனால் திராவிடர்களின் வரலாற்றை எழுதக்கூடிய வாய்ப்பு அண்ணாவுக்கு அமையவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு மட்டும் அவருக்கு அமைந்து இருக்குமானால், நிச்சயமாக நடிகவேள் எம்ஆர்.ராதாவைப் பற்றி அவர் பல பக்கங்கள் எழுதி இருப்பார் என்பது உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web