ஷங்கர் சார்கிட்டயே வொர்க் பண்ணியிருந்தாலும், அவர் 'ஈரம்' வாய்ப்பை ஈஸியா கொடுக்கல... இயக்குநர் அறிவழகன் ஷேரிங்ஸ்!

 
Eeram shankar arivazhagan

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் 'பாய்ஸ், அந்நியன்' என இரண்டு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் தான் அறிவழகன். இவர் இயக்குநராக களமிறங்கிய 'ஈரம்' படத்தை அவருடைய குருநாதர் ஷங்கரே தயாரித்தார்.

ஹாரர் த்ரில்லர் ஜானர் படமான இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. 

2009-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் குறித்து இயக்குநர் அறிவழகன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் "நான் ஷங்கர் சாரிடம் ஒரு காதல் கதையும், 'ஈரம்' கதையும் சொன்னேன். அவர் 'ஈரம்' கதை நல்லாருக்கு டெவலப் பண்ணிட்டு வான்னு சொன்னார்.

அப்புறம் நான் டெவலப் பண்ணிட்டு போய், அவர்கிட்ட நான்கரை மணி நேரம் கதை சொன்னேன். அவர் பொறுமையா கேட்டார். வெளில உள்ளவங்க நினைப்பாங்க, நான் ஷங்கர் சார்கிட்டயே வொர்க் பண்ணனால எனக்கு easy-ஆ படம் கிடைச்சிருன்னு. ஆனா, அப்படி கிடைக்கல.

Eeram movie

எப்படின்னா, முழு கதைய கேட்டுட்டு அவர் என்கிட்ட bound script ரெடி பண்ணிட்டு வர சொன்னார். நான் ஒரு 3 மாசத்துல அதை ரெடி பண்ணிட்டு போய் கொடுத்தேன். அவர் படிச்சுட்டு சில கரெக்ஷன்ஸ் சொன்னார், அதெல்லாம் பண்ணி ஒரு வாரத்துல ஸ்கிரிப்ட் ஓகே ஆயிருச்சு.

அப்புறம் அவர் என்ன சொன்னாருன்னா, நீ என்கிட்ட ரெண்டு படம் தான் assistant-ஆ வொர்க் பண்ணியிருக்க. கதையா சொல்லிட்ட, எதுதிட்ட, எல்லாமே ஓகே. ஆனா, நீ execution எப்படி பண்ணுவன்னு தெரிஞ்சா தான், எனக்கு திருப்தியா இருக்கும்.

அதுனால, என்னோட செலவுல நீ இந்த படத்தோட ஸ்கிரிப்ட்ல இருந்து ஏதாவது ரெண்டு சீனை எடுத்து ஷூட் பண்ணி, எல்லா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிச்சு எனக்கு காமின்னு சொன்னார். நான் அவர் சொன்ன மாதிரியே ரெண்டு சீனை எடுத்து காமிச்ச பிறகு தான், ஓகே நாம இதை படமா பண்ணுவோம்ன்னு ஷங்கர் சார் சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web