'குருதிப்புனல்' கதையை கேட்டுட்டு கமல் சார்கிட்ட நான் அந்த கேள்வியை கேட்டேன்... சுவாரஸ்யத் தகவல் சொன்ன அர்ஜுன்!

 
Kuruthipunal kamal haasan arjun

ஒரு மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வார்கள். ஆனால், ஒரிஜினல் வெர்ஷன் அளவுக்கு ரீமேக் கண்டிப்பாக இருக்காது.

அதுவே ஒரிஜினல் படத்தை எடுத்த இயக்குநரே, ரீமேக் தான் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி பாராட்டைப் பெற்ற தமிழ் படம் தான் 'குருதிப்புனல்'. இது இயக்குநர் கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் ஹிந்தியில் ரிலீஸ் ஆகி ஹிட்டான 'துரோக்கால்' படத்தின் ரீமேக்.

தமிழ் வெர்ஷனில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 'ஆதி நாராயணன்' என்ற கேரக்டரிலும், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் 'அப்பாஸ்' என்ற கேரக்டரிலும் நடித்திருந்தனர். இதற்கு திரைக்கதை, வசனத்தை கமலே எழுத, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்தார்.

சமீபத்தில், நடிகர் அர்ஜுன் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "'குருதிப்புனல்' கதையை கேட்டுட்டு நான் கமல் சார்கிட்ட கேட்டேன். சார் நீங்க 'அப்பாஸ்' கேரக்டரை எனக்கு கொடுக்குறீங்க.

ஆனா, இந்த கேரக்டருக்கு தான் சார் படத்துல Elevation இருக்கு. அதை தெரிஞ்சே எனக்கு அதை பண்ண கொடுக்குறீங்களான்னு கேட்டேன். அதுக்கு கமல் சார் சொன்னார், இல்ல அர்ஜுன் நான் 'அப்பாஸ்' கேரக்டர்ல நடிச்சா, அப்புறம் என்னோட 'ஆதி நாராயணன்' கேரக்டர்ல நடிக்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.

From Around the web