'முந்தானை முடிச்சு'-க்காக ஏவிஎம் சரவணனுக்கு கே.பாக்யராஜ் போட்ட கண்டிஷன்!

 
Mundhanai mudichu

தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்தவர் தான் கே.பாக்யராஜ். ஆரம்ப காலத்தில் அவரே இயக்கி, ஹீரோவாகவும் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

சமீபத்தில், கே.பாக்யராஜ் மரணமடைந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், தமிழ்நாட்டு மக்களும் அதிர்ச்சியடைந்தனர். கே.பாக்யராஜ் 1983-ஆம் ஆண்டு நடித்து, இயக்கிய படம் தான் 'முந்தானை முடிச்சு'.

இதில் கதாநாயகியாக ஊர்வசி நடித்திருந்தார். 'ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் இப்படத்தை தயாரித்தனர். தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் 'முந்தானை முடிச்சு' படம் குறித்து பேசுகையில் "பாக்யராஜ் சார் 'முந்தானை முடிச்சு' கதைய சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு கண்டிஷன் போட்டார். என்னன்னா கதைய நான் உங்க ஆபிஸுக்கு வந்து உங்க ரூம்ல உட்கார்ந்து சொல்ல மாட்டேன்.

Mundhanai mudichu

Palmgrove hotel-ல ரூம் நம்பர் 88-க்கு வந்திருங்க, நான் கதை சொல்றேன்னு சொன்னார். ஏன் சார்? நான் என்னோட ரூம்ல தான் எல்லா கதையுமே கேட்பேன்னு சொன்னேன். இல்ல சார், தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்கன்னு சொன்னார்.

அப்புறம் நான், குமரன், பாலு மூன்று பேரும் அவர் சொன்ன இடத்துக்கு போனோம். பாக்யராஜ் சார் கூட இருந்தவங்கல வெளியே அனுப்பிட்டு, கதை சொல்ல ஆரம்பிச்சாரு. இடைவேளையின் போது எங்களுக்கு காபி கொடுக்கச் சொல்லிட்டு அவர் வெளியே போனார்.

மீண்டும் வந்து இரண்டாம் பாதி கதைய சொல்லி முடிச்சார். அவர் சொல்லி முடிச்சதும், இது கண்டிப்பா சூப்பர் ஹிட் படமா வரும் சாருன்னு சொன்னேன். அப்புறம், ஏன் இங்க வந்து சொல்ல சொன்னீங்கன்னு கேட்டபோது, உங்க ரூம்ல டெலிபோன் அடிக்கடி வரும், divert ஆகாம முழு ஸ்கிரிப்ட்டையும் சொல்லத்தான் சாருன்னு சொன்னார். அவர் அந்த படத்தை ரொம்ப அருமையா எங்களுக்கு பண்ணிக் கொடுத்தார்" என்று கூறியிருந்தார்.

From Around the web