15 லட்சத்தில் ஏவிஎம் சரவணனுக்கு 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற திருப்தியான படத்தை கொடுத்த விசு!

 
Samsaram adhu Minsaram avm saravanan

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர் விசு. இவர் இயக்கி, நடித்த 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் 1986-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இதை 'ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் எம்.சரவணன் தயாரித்திருந்தார். இதில் லக்ஷ்மி, வாகை சந்திரசேகர், மனோரமா, ரகுவரன், கமலா காமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் க்ளைமேக்ஸ் ஹைலைட்டாக இருந்தது. விசுவும், ஏவிஎம் சரவணனும் மறைந்து விட்டாலும் அவர்கள் கொடுத்த பல நல்ல படங்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

Samsaram adhu Minsaram

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏவிஎம் சரவணன் கொடுத்த பேட்டியில் 'சம்சாரம் அது மின்சாரம்' குறித்து பேசுகையில் "விசு சார் மொத்தம் நான்கு கதைகள் சொன்னார். ஆனா, ஒரு கதை கூட எனக்கு திருப்தியா இல்லன்னு சொல்லிட்டேன்.

அவருக்கு உடனே கோபம் வந்திருச்சு. சார் எனக்கு சான்ஸ் கொடுக்குற எண்ணம் இல்லைன்னா சொல்லிருங்க சார், அதைவிட்டுட்டு இப்படி இழுத்தடிக்காதீங்கன்னு சொன்னார். நான் சொன்னேன், சார் நான் உங்ககிட்ட இருந்து ஒரு நல்ல ஃபேமிலி சப்ஜெக்ட் எதிர்பாக்குறேன்னு சொன்னேன்.

Uravukku Kai Koduppom samsaram adhu Minsaram

அதுக்கப்புறம் 'சம்சாரம் அது மின்சாரம்' கதைய சொன்னார். ஏன் சார் இதை ஃபர்ஸ்ட்டே சொல்லலன்னு கேட்டேன். இல்ல சார் இது 'உறவுக்கு கை கொடுப்போம்'-ன்னு நான் போட்ட டிராமாவோட கதை. அப்புறம் இதை 1975-லயே நம்ம ஒய்.ஜி.மகேந்திரன், ஜெமினி கணேசன் சாரை வச்சு படமா இயக்கினார். ஆனா, படம் ரிலீஸ் ஆகி ஆறு நாள் கூட ஓடல சாருன்னு சொன்னார்.

அப்புறம் அந்த படத்தோட ரைட்ஸை நான் ரூ.30 ஆயிரத்துக்கு வாங்குனேன். விசு சார் இதுக்கு திரைக்கதை, வசனம் அருமையா எழுதி ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் மொத்த படத்தையும் எனக்கு முடிச்சு கொடுத்தார். படமும் ரொம்ப நல்லா வந்திருந்தது, எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு" என்று கூறியிருந்தார்.

From Around the web