'நாடோடிகள்' படத்தை பார்த்துட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் சார் சொன்ன விஷயம்... நெகிழ்ந்து போன சமுத்திரக்கனி!

 
Nadodigal k balachander samuthirakani

நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கிய முதல் இரண்டு படங்கள் சரியாக போகவில்லை. அவர் இயக்கிய 3-வது படமான 'நாடோடிகள்' முதல் இரண்டு படங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியையும், பாராட்டையும் சேர்த்து பெற்று தந்தது. 

அந்த அளவுக்கு அப்படம் தரமாக இருந்தது. இதில் சசிகுமார் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். சமீபத்தில், சமுத்திரக்கனி கொடுத்த ஒரு பேட்டியில் 'நாடோடிகள்' படத்தை பார்த்த அவரது குருநாதரும், பிரபல இயக்குநருமான கே.பாலசந்தர் சொன்ன விஷயம் குறித்து பேசுகையில் "'நாடோடிகள்' ரிலீஸ் ஆகி ஒரு 4 நாட்களுக்கு பிறகு கே.பாலசந்தர் சாரை போய் சந்தித்து படம் சூப்பர் ஹிட்டாயிருச்சுன்னு சொல்லிட்டு, நீங்க வந்து பாக்கணும்ன்னு சொன்னேன்.

அவர் நான் உன்னோடு சேர்ந்து தான் பார்ப்பேன்னு சொன்னார். அப்புறம் நானும் அவரும் சேர்ந்து ஒரு தியேட்டருக்கு பார்க்க போனோம். ஆடியன்ஸ் எப்போலாம் கை தட்டுனாங்களோ அப்பலாம், என் கையை இருக்கமா புடிச்சு அவரோட சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

அப்புறம் அவர் படம் முடிஞ்சதும், கனி நீ என்னோட கடைசி புள்ள, நீ ஜெயிக்கலையேன்னு பல நாள் இரவு நான் உன்னை பத்தி யோசிச்சிருக்கேன். ஆனா, இந்த ஒரு வெற்றி போதும்டா காலத்துக்கும் உன்னைய காப்பாத்திரும். எனக்கு சீட்டு மேல ஏறி நின்னு ஓன்னு கத்தனும் போல இருக்குடா அப்படின்னு சொன்னார். நான் அப்படியே அவர் கால்ல விழுந்தேன்" என்று கூறியுள்ளார்.

From Around the web