வாடி என்று கூப்பிட்ட டைரக்டரை என்னடா என்ற பானுமதி... ரொம்பக் கோபக்காரரரா இருப்பாரோ?

 
Banumathi

 

ரொம்பக் கோபக்காரின்னு பெயர் எடுத்ததால பானுமதி பக்கம் நெருங்குறதுக்கே அந்த காலகட்டத்துல எல்லா கதாநாயகர்களும் பயப்படுவாங்க. எம்ஜிஆர், சிவாஜி இவங்க எல்லாம் கூட எங்கிட்ட ரொம்ப மரியாதையா பழகுவாங்க. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலதான் எம்ஜிஆர் என்னை அம்மா என்று கூப்பிடத் தொடங்கினார்.

அவரைத் தொடர்ந்து சிவாஜியும் என்னை அம்மா என்று கூப்பிடத் தொடங்கினார். 30 வயசுலேயே என்னை விட அதிகமான வயசுக்காரர்களுக்கு எல்லாம் நான் அம்மாவாகி விட்டேன். இப்படி அவங்க எல்லாம் பயந்ததுக்குக் காரணம் நான் கலந்துகொண்ட படப்பிடிப்பிலே நடந்த ஒரு சம்பவம். நான் அப்போ ஒரு தமிழ் படத்தில் நடிச்சிக்கிட்டு இருந்தேன்.

அந்தப் படத்தின் உடைய டைரக்டரைப் பொருத்தவரைக்கும் எல்லா நடிகைகளையும் வாடி, போடின்னு கூப்பிடுறதுதான் அவருடைய வழக்கமா இருந்தது. ஒருநாள் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து என்னடி அப்படின்னு சொல்ல, நான் திரும்ப அவரைப் பார்த்து என்னடா என்றேன். நான் அப்படி கூப்பிட்ட உடனே அந்த டைரக்டர் மட்டும் அல்ல. அந்த செட்ல இருந்த எல்லாருமே அசந்துட்டாங்க. அந்த டைரக்டரைப் பொறுத்தவரைக்கும் படப்பிடிப்புல அப்படி கூப்பிடுறது அவருக்குப் பழக்கமா இருந்தது.

அதனாலதான் என்னைப் பார்த்தும் அப்படி கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டது எனக்குப் பிடிக்கல. அதனால்தான் நான் என்னடான்னு அவரைப் பார்த்து கூப்பிட வேண்டியதாயிற்று. நடிகைகளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கணும்னு சினிமா உலகத்துல புரட்சி செய்த முதல் ஆள்னா அது நான் தான் என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் நடிகை பானுமதி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.  

Tags

From Around the web