கிளுகிளுப்புக்கு சாமியை மறந்துடுங்க... இளையராஜாவுக்கு பாக்கியராஜ் போட்ட ஆர்டர்!

 
ilaiyaraja, bhagyaraj

முந்தானை முடிச்சு படத்தில் வரும் வெளக்கு வச்ச நேரத்துல பாடல் எப்படி உருவானது? வாங்க அந்த சுவாரசியத்தைப் பாக்கியராஜ் சொல்லக் கேட்போம். 

ஆறேழு டேக் வாங்கி பாட்டு எல்லாம் படிச்சி ரெக்கார்டிங் பண்ணதுக்குப் பிறகு 8வது டேக்ல பாட்டு எனக்குப் பிடிக்கல. வரிகளை மாற்றணும்னு சொல்லி எழுதிய பாடல் தான் 'வெளக்கு வச்ச நேரத்துல...' அந்தப் பாட்டைக் கேட்டதும் இளையராஜா, 'என்ன இப்படி கிளுகிளுப்பா எழுதிருக்கீங்க. நான் பாட மாட்டேன்'னு சொன்னாரு. ஏன்னு கேட்டேன். 'நான் சாமிக்கு மாலை போட்டுருக்கேன்'னாரு. 'உங்களை யார் மாலை போடச் சொன்னா?' 'என்ன யாரு மாலை போடச் சொன்னான்னு நீங்க கேட்குறீங்க?'ன்னாரு.

'நீங்க மாலை போட்டதுக்காக நான் என்ன சாமி படமா எடுக்க முடியும்? ஒண்ணு மாலை போடுற நேரத்துல நான் கம்போசிங்க்ல உட்காரலன்னு சொல்லுங்க. இல்லன்னா மாலையை மறைச்சி வச்சிக்கிட்டு எங்களுக்கு என்ன வேணுமோ அந்த கிளுகிளுப்புக்கு சாமியை மறந்து இதுக்கு வாங்க'ன்னு சொன்னார் பாக்கியராஜ். அப்புறம் ஒரே கோபம். ஜானகி அம்மா பாடுனதும் இவரும் பாடுனாரு. பாடும்போது கடைசி பல்லவி பாடும்போது, மாமன் வந்தானுக்காக 'தன்னானன்னா'ன்னு சொன்னாரு.

மறைஞ்சி நின்னு பார்க்கையில 'தரனானன்னான்'னு சொன்னாரு. உடனே 'ஜானகி அம்மா 'பேக்கப்'னு சொல்லிட்டேன். 'நான் இன்னும் பாடவே இல்லையே..'ன்னு சொன்னார் இளையராஜா. 'இல்ல. முதல்ல நீங்க செக்ஸா இருக்கு. பாட மாட்டேன்னு சொன்னீங்க. ஆனா இப்பப் பாடுனதுதான் ரொம்ப செக்ஸா இருக்கு'ன்னு சொன்னேன். 'விளக்கு வச்ச நேரத்துல தன்னானன்னா... மறைஞ்சி நின்னு பார்க்கையில தரனானன்னா... 'அதைக் கேட்டதும், 'இல்ல இல்ல. நான் பாடுறேன்னாரு. வேணாம். நீங்க சாமிக்கு மாலை போட்டுருக்கீங்க. வேணாம்'னு சொன்னேன். அப்புறம் சரவணன் சார் எல்லாம் 'நீங்க சரியான ஆளு'ன்னு சிரிச்சிட்டாரு என்கிறார் பாக்கியராஜ். 

Tags

From Around the web