பாக்கியராஜ் சொன்ன தன்னம்பிக்கை! அதிலும் நெப்போலியனின் பாசிடிவ் எனர்ஜி வேற லெவல்!

 
bhagyaraj, nepoleon

திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் நிகழ்ச்சி ஒன்றில் தன்னம்பிக்கையைப் பற்றி இவ்ளோ சிம்பிளா சூப்பரா சொல்லிருக்காரு. வாங்க அது என்னன்னு பார்க்கலாம். 

எப்பவும் ஒரு பாசிடிவா நினைங்க. அதை சிம்பிளா சொல்லணும்னா ரோஜா செடியில முள் இருக்கேங்கறதை ஐயய்யோ முள் செடியில ரோஜா இருக்கேன்னு சொல்றதுதான் பாசிடிவ் எண்ணம். அது வந்து என்னன்னா நெப்போலியனை சுற்றி அவரு தளபதி போர்க்களத்துல வந்து சொல்றாரு. சார் நம்மளை வந்து சுற்றி நாலாபக்கமும் எதிரிகள் வளைச்சிட்டாங்கன்னு சொல்றாரு.

உடனே நெப்போலியன் சொல்றாரு. பரவாயில்லை. நம்ம வீரர்களுக்கு எல்லாம் நாலு பக்கமும் சுத்தி சுத்தி சுடுறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு இல்ல. கிரேட். பயன்படுத்தச் சொல்லுங்கன்னுட்டாரு. இப்படி பாசிடிவா திங் பண்ணனும். அதே மாதிரி வாழ்க்கையில இழப்புகள் நிறைய இருக்கும். பணம் இழந்தால்இ பெரிய இழப்பு தான்.

அதே மாதிரி நண்பர்களை இழந்தால் அது மிகப்பெரிய இழப்பு. ஆனாஇ தன்னம்பிக்கையை இழந்துட்டோம்னா அது ஈடே செய்ய முடியாத இழப்பு. அதனால எப்பவுமே அந்த தன்னம்பிக்கையை மட்டும் இழந்துடக்கூடாது என்கிறார் பாக்கியராஜ்.  

Tags

From Around the web