கமல் சொன்ன அந்த வார்த்தைதான் என் வெற்றிக்கு காரணம்!.. பாரதிராஜா சொன்ன சீக்ரெட்..

 
kamal bharathi raja


பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன் சப்பானியாக நடித்திருந்தார். பாரதிராஜா மீது நம்பிக்கை வைத்து அந்த படத்தில் நடித்தார் கமல். அதேபோல் கமலை வைத்து டிக் டிக் டிக்,  சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்களையும் பாரதிராஜா இயக்கினர்.

பாரதிராஜாவால் கிராமத்து படங்களை மட்டுமே எடுக்க முடியும் என பலரும் பேசியபோதுதான் இந்த மூன்று படங்களையும் எடுத்துக் வெற்றி பெற்று காட்டினார். எனவே கமல்ஹாசனுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. அதே போல் கமல்ஹாசனின் திறமையை எப்போதும் சிலாகித்து பேசுபவர்தான் பாரதிராஜா. கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய திறமைசாலி என்று பல பேட்டிகளிலும் பாராட்டி பேசியிருக்கிறார்..

இந்நிலையில்தான், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக நேற்று பாரதிராஜா மரணமடைந்தார். இன்று அவரின் உடல் தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில்தான் கமல் பற்றிய ஒரு பாரதிராஜா கொடுத்த ஒரு பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் உதவி இயக்குனராக இருந்தபோது கமல் உதவி நடன இயக்குனராக இருந்தார். ஒரு நாள் கர்நாடகாவில் ஒரு ஷூட்டிங்கில் இருந்தும் சந்தித்துக்கொண்டோம். அப்போது நான் நடந்து போனால் மக்கள் அனைவரும் என்னை திரும்பி பார்க்க வேண்டும்.. அப்போதுதான் நான் சென்னை வருவேன் என கமல் என்னிடம் கூறினார். அந்த வைராக்கியத்தை அப்படியே நானும் உள்வாங்கி கொண்டேன்’ என பாரதிராஜா கூறியிருக்கிறார்.

From Around the web