முதல் முறையாக இளையராஜா-பாரதிராஜா கூட்டணியில் வித்தியாசமான பாடல்..! அட அப்பவே இப்படியா?
இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் கூட்டணியில் உருவான மிகவும் மாறுபட்ட ஒரே ஒரு பாடல் இதுதான்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜா இயக்குனராகவே நடித்தார். இளையராஜா இசை அமைத்தார். அருணா, சந்திரசேகர், கவுண்டமணி உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் இளையராஜா, சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகிய மூவரும் பாடிய பாடல் இது. தோப்பில் ஒரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே...
இந்தப் பாடலில் தமிழ்சினிமாவில் வராத விஷயம் ஒண்ணு இருக்கு. பாரதிராஜா ஒரு கிராமத்துக்குப் படம்பிடிக்கப் போகிறார். அப்படிப் போகும்போது மொத்த கிராமமே வந்து பார்க்கும். அந்தக் காலகட்டத்தில் பேருந்தே வராத நேரம். அதுல அருணா ஒரு சலவைத் தொழிலாளி மகள். பாரதிராஜாவை அவர் மானசீகமாக காதலிப்பார். அவரும் அருணாவை காதலிப்பார். அந்தப் படத்தில் புதுசா சினிமா பிடிக்கிறதைப் பார்த்துட்டு குழந்தைகள் அது மாதிரியே டிராமா போடுறதுதான் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டை எழுதியவர் கங்கை அமரன்.
இந்தப் பாட்டில் பாரதிராஜாவுக்குப் பாடி இருப்பவர் இசைஞானி இளையராஜா. இந்தப் பாட்டுல உண்மையிலேயே ஹீரோ, ஹீரோயின்கள் வருவாங்க. அவங்களுக்காக சைலஜாவும், மலேசியா வாசுதேவனும் பாடுவாங்க. சைலஜாவின் குரலில் என்ன சிறப்புன்னா குழந்தைகளுக்கு அச்சு அசலாப் பொருந்தி இருக்கும். குழந்தைகளுக்கும் சைலஜா ஒரு பக்கம் பாடியிருப்பாங்க. இந்தப் பாட்டைக் காட்சியாகப் பார்த்தால் தான் தெரியும். என்னென்னவெல்லாம் சேட்டை பண்ணியிருக்காங்கன்னு. இந்தப் பாட்டு குழந்தைகள் உலகம் எப்படிப்பட்டதுன்னு கொண்டு போய் சேர்க்கும். அப்படி ஒரு இசையை இளையராஜா கொண்டு வந்து இருப்பார்.
இது மாதிரி வடிவில் முதல் முதலில் தமிழ்சினிமா உலகில் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜாவும், பாரதிராஜாவும் தான். இதன்பிறகு சக்கரைக்கட்டிக்கு, கோட்டையை விட்டு ஆகிய பாடல்கள் இந்த ரகத்தில் வந்தன. இந்தப் பாடலில் என்ன சிறப்புன்னா பாரதிராஜா படம் இயக்குவது போலவும், கட் என்று சொல்வது போலவும் பாடல் முழுக்க குழந்தைகள் உலகம் டிராமா போட்டு ஆடுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இப்படி ஒரு பாடல் இதற்கு முன்பு தமிழ்சினிமா உலகில் வந்ததே இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
