அல்லி நகரம் பண்ணைபுரத்துடன் இணைந்தது எப்படி? பாரதிராஜா குறித்த சுவாரசிய தகவல்

 
ilaiyaraja, bharathiraja

இன்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் இளையராஜாவுடன் இணைந்தது குறித்த ஒரு தகவல். தமிழ்சினிமா உலகில் இயக்குனர் இமயம் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானது கிடையாது. ஸ்டூடியோவுக்குள் உழன்ற சினிமாவைக் கிராமத்துக்குள் அழைத்துச் சென்று மண்வாசனையுடன் படங்களைக் கொடுத்தார். கதாநாயகனுக்கான வரையறைகளை மாற்றியவர். நாயகனுக்குக் கோவணம் கட்டி வெத்தலை சொதப்பி சப்பாணியாக மாற்றிக் காட்டியவர். தமிழ் சினிமா உலகில் அவர் வருகைக்கு முன் அவர் வருகைக்குப் பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து இந்தியத் திரை உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் நீண்ட பயணம். 

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லி நகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தாயார் பெயர் மீனாட்சி என்கிற கருத்தம்மா. 1941ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி பிறந்தார். இவருக்கு 3 சகோதரிகள். 3 சகோதரர்கள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னச்சாமி. படைக்கும்போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்தது. நாடகங்கள் பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினார். சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராகச் சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்யும் வேலை.

அப்படி ஒருமுறை பண்ணைபுரம் சென்று இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள் பாரதிராஜாவின் நாடகத்துக்கு இசை அமைக்க மதுரை சென்றார்கள். பாரதிராஜாவின் ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவரது நாடக ஆர்வத்தைப் பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் மகன் அன்னக்கிளி செல்வராஜ் இவர்களுடன் நண்பர் ஆனார். 

சினிமாவுக்கு சென்றால் பெரிய அளவில் புகழை அடையலாம் என்றனர். முதலில் அன்னக்கிளி செல்வராஜ் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். அதன் பின்பு பாரதிராஜா வந்தார். சினிமாவில் உடனே வாழ்க்கை அமையவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும்போராட்டமாக இருந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைத்து வந்த ஜிகே.வெங்கடேசன் அறிமுகம் கிடைக்க அவரிடம் கிதார் வாசிக்கச் சென்றார் இளையராஜா. 

Tags

From Around the web