சாமுவேல் ஜாக்சனை வைத்து ஹாலிவுட்டில் 'பொம்மலாட்டம்' ரீமேக்... பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை!

 
Bommalattam bharathiraja samuel jackson

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

பாரதிராஜா இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் 'பொம்மலாட்டம்'. இதில் நானா படேகர், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், காஜல் அகர்வால், ருக்மிணி விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் தெலுங்கில் 'ராணா' என்ற பெயரிலும், ஹிந்தியில் 'ஃபைனல் கட் ஆஃப் டைரக்டர்' என்ற பெயரிலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து இதை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்ததாம்

இது குறித்து அந்த நேரத்தில் பாரதிராஜா கொடுத்த பேட்டியில் "எனது 'பொம்மலாட்டம்' படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்போகிறேன். அதற்காக இதன் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறேன்.

அமெரிக்காவில் இருக்கும் என்னுடைய நான்கு நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழில் நானா படேகர் பண்ண ரோலில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சன் நடிக்கப்போகிறார்" என்று கூறியிருந்தார். அதன் பிறகு சில காரணங்களால் இது டிராப்பாகி பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசைகளின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது.

From Around the web