பாரதிராஜா சினிமாவில் நுழைந்த கதை... முதல் படத்திலேயே சாதித்தது எப்படி?

 
16 vayathinile, bharathiraja

உடல் நலக்குறைவால் நேற்று பாரதிராஜா காலமானார். இது தமிழ்த்திரை உலகையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ்த்திரை உலகில் அவர் நுழைந்த கதை பற்றிப் பார்ப்போம்.

புட்டண்ணாவிடம் இருளும் ஒளியும் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பாரதிராஜா. அடுத்து கேஆர்ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய தலைப்பிரசவம் தயாரிப்பில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். அடுத்து கேஆர்ஜி.தயாரிப்பில் ஜெகநாதன் இயக்கிய அதிர்ஷ்டம் அழைக்கிறது படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்தப் படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கேஆர்ஜி. அவருக்குப் படங்கள் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். 

முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி. வி.குமார் இசை அமைக்க படத்துக்கு சொந்த வீடு என்று பெயர் சூட்டப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் அந்தப் படம் டிராப் ஆனது. கேஆர்ஜி. அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டு இருந்த போது மயிலு என்ற கதையை அவருக்கு சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. அது ராஜ்கண்ணுவிற்கு பிடித்து விட்டது. அதுதான் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. 

தேவராஜ் மோகன் இயக்கத்தில் அன்னக்கிளி படம் வெளியாகி பெரும் வெற்றிப்படமானது. இளையராஜா புகழ்பெற்றார்;. உடனே, தனது நண்பர் இளையராஜாவை 16 வயதினிலே படத்துக்கு இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பைத் தொடங்கினார் பாரதிராஜா. 1977, செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியானது. இது பெரும் வெற்றிப்படமாகி வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார். 

Tags

From Around the web